ஒரு வயது தம்பியை சுட்டுக் கொன்ற 3 வயது சிறுவன்... துப்பாக்கியை தவற விட்ட உறவினர் மீது வழக்கு!

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்காவில் ஒரு வயது தம்பியை, அவனது மூன்று வயது அண்ணன் எதிர்பாரா விதமாக சுட்டுக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவத்தன்று அமெரிக்காவில் கிளேவ் லேண்டு பகுதியில் உள்ள ஒரு வீட்டுக்கு நண்பர் ஒருவர் வந்திருந்தார். சிறிதுநேரம் பேசிவிட்டு கிளம்பிய நண்பர், தனது துப்பாக்கியை மறந்து அங்கேயே வைத்து விட்டுச் சென்று விட்டார். அதனை அக்குடும்பத்தாரும் கவனிக்கவில்லை.

Boy, 3, Shoots And Kills One-Year-Old Brother

அப்போது அங்கே 3 வயது சிறுவன் ஒருவனும், அவனது ஒரு வயது தம்பியும் விளையாடிக் கொண்டிருந்துள்ளனர். துப்பாக்கி இருப்பதைக் கண்ட 3 வயது சிறுவன், அதனை விளையாட்டுத் தனமாக இயக்கியுள்ளான்.

துப்பாக்கியில் இருந்து சீறிப் பாய்ந்த குண்டு அருகில் விளையாடிக் கொண்டிருந்த ஒரு வயது சிறுவனின் முகத்தில் பாய்ந்தது. துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டு விரைந்து வந்த சிறுவனின் தாயார், படுகாயமடைந்த சிறுவனை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால், அச்சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டதாக அவனைப் பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மறதியாக துப்பாக்கியை விட்டுச் சென்ற நபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+