ஒரு தாயின் ஆசை.. 132 அடி அந்தரத்தில் தொங்கிய 5 வயது மகன்
132 அடி உயரத்தில் தொங்கிய சிறுவன் மீட்கப்பட்டுள்ளான்.
Recommended Video

சீனா: எல்லா அம்மாக்களுக்கும் தான் பெற்ற பிள்ளைகள் பற்றி நிறைய ஆசைகள் இருக்கும்! நிறைய கனவுகள் இருக்கும்!! ஆனால் சீனாவில் ஒரு அம்மாவுக்கு வந்திருக்கும் ஆசை இருக்கிறதே... அது ஆசையே இல்லை... அலற வைக்கும் ஆபத்து என்றுதான் சொல்ல வேண்டும்!!
ஜெஜியாங் மாகாணத்தில் தைசூ யுஹான் என்று ஒரு பார்க் இருக்கிறது. சின்ன பிள்ளைகளுக்கு இந்த பார்க் என்றால் உயிர். அதனால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அடிக்கடி இங்கு கூட்டி வருவார்கள்.

தனி ஒருவன்..
இப்படித்தான் கடந்த 24-ம் தேதி ஒரு அம்மா தன் 5 வயது மகனை இந்த பார்க்கிற்கு கூட்டி வந்தார். எல்லா இடங்களிலும் சிறுவன் ஓடியாடி விளையாடி கொண்டிருந்தான். அப்போது அங்கு ஒரு ராட்சத ராட்டினம் இருந்தது. அதை பார்த்த அந்த அம்மா, தன் மகனை இதில் ஏற்ற வேண்டும் என்று பணியில் இருந்தவர்களை கேட்டுக் கொண்டார். அதற்கு அவர்களும் சரி என்றனர். ஆனால் அம்மாவோ, இல்லை.. இல்லை.. என் மகனை மட்டும் அதில் தனியாக ஏற்றி சுற்ற வேண்டும்" என்றார்.

கட்டிங் தந்த அம்மா
அங்குள்ள ராட்சத ராட்டினத்தை பார்த்த அவர், அதில் தன் மகனை மட்டும் தனியாக ஏற்றி விட்டு, சுற்ற வேண்டும் என அங்குள்ள பணியாளர்களை கேட்டுக் கொண்டார். இதை கேட்டு ஊழியர்கள் ஷாக் ஆகிவிட்டனர். முடியவே முடியாது என்று அந்த அம்மாவிடம் கறாராக சொன்னார்கள். ஆனால் மறுத்த ஊழியர்களுக்கு அம்மா தனியாக கட்டிங் கொடுத்து கரெக்ட் செய்தார். அதாவது 30 யுவான் (நம்ம ஊர்ல ரூ.316) கொடுத்தபின்பு ஊழியர்கள் கப்சிப் ஆனார்கள்.

பூரித்து போன தாய்
சிறுவனை தூக்கி ராட்டினத்தின் கதவுகளை திறந்து உள்ளே உட்கார வைத்தனர். சிறுவனும் தைரியமாக உட்கார்ந்து கொண்டான். ராட்டினம் சுற்ற தொடங்கியது. பையன் தன்னந்தனி ஆளாக ராட்டினத்தில் சுற்றுவதை கீழே நின்று தாய் பூரித்து போய் பார்த்து கொண்டிருந்தார்.

132 அடி உயரம்
தைரியமான பையன்தான்... ஆனால் ரொம்ப தைரியம் போல இருக்கு. ராட்டினம் 132 அடி உயரத்தில் சுற்றிக் கொண்டிருந்தபோது திடீரென அதன் கதவை திறந்துவிட்டான்!! கிட்டத்தட்ட கீழே தடுமாறும் நிலைக்கு வந்துவிட்டான். ஆனால் அவன் கால்கள் ராட்டினத்தின் கம்பிகளுக்குள் சிக்கி கொண்டது. அதனால் கீழே விழவில்லை. ஆனால் 132 அடி உயரத்தில் சிறுவன் தொங்கி கொண்டிருந்தான்.

காப்பாற்றிய கம்பிகள்
இதைப்பார்த்த பிறகு பதறிப்போன ஊழியர்கள், உடனடியாக சிறுவனை மீட்டு, தனியார் மருத்துவமனைக்கு முதலுதவி சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அதன் கதவை திறந்து சிறுவன் வெளியே வந்துள்ளான். அப்போது, தடுமாறி கீழே விழும் நிலைக்கு சிறுவன் சென்றான். இதனால் செய்வதறியாது அங்கிருந்த ஊழியர்கள் திணறினர். அதிர்ஷ்டவசமாக அவனது கால்களும் கழுத்தும் ராட்டின கம்பிகளை பிடித்துக் கொண்டதால் 132 அடி உயரத்தில் தொங்கினான் சிறுவன்.
ஊழியர்கள் சஸ்பெண்ட்
பின்னர் ஒருவழியாக சிறுவன் மீட்கப்பட்டு முதல் உதவிக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். தகவலறிந்து வந்த போலீசார் சிறுவனின் அம்மாவிடம், பார்க் ஊரியர்களிடம் விசாரணை நடத்தினார்கள். அதற்கு பிறகு கட்டிங் வாங்கிக் கொண்டு சிறுவனை ராட்டினத்தில் ஏற்றிய அந்த ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்கள்.












Click it and Unblock the Notifications