குழந்தை பெற்ற 10 வயது சிறுமி! தாயின் 2வது கணவன் கைது
ரியோடி ஜெனிரோ: பிரேசில் நாட்டைச் சேர்ந்த 10 வயது சிறுமிக்கு குழந்தை பிறந்தது.
தென்கிழக்கு பிரேசிலில் பள்ளி ஒன்றில், வகுப்பறையில் இருந்த ஒரு மாணவிக்கு திடீரென்று வயிற்று வலி ஏற்பட்டது. உடனே, ஆசிரியர்கள் அந்த மாணவியை, மருத்துவமனையில் சேர்த்தனர். பரிசோதனையில், அந்த 10 வயது மாணவியின் வயிற்றில், ஏழு மாத சிசு இருப்பது கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

உடனே அறுவை சிகிச்சை செய்து, அந்த குழந்தையை நல்லபடியாக வெளியில் எடுத்தனர். இதையடுத்து, மாணவியை விசாரித்ததில், தனது தாயின் 2வது கணவர்தான் அவளை பலாத்காரம் செய்துவந்த விஷயம் தெரியவந்தது.
'விஷயத்தை வெளியில் சொன்னால், உன் தாயையும், தம்பியையும் கொன்று விடுவேன்' என்று தந்தை மிரட்டியதாகவும் மாணவி தெரிவித்தாள். இதையடுத்து போலீசார், அந்த காமமிருகத்தை கைது செய்தனர். அவன் மீது ஏற்கனவே, குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்தது, சட்ட விரோதமாக ஆயுதங்கள் வைத்திருந்தது தொடர்பான குற்ற வழக்குகள் உள்ளன என்பது அப்போதுதான் தெரியவந்தது.
சிறுமியின் தாயை, போலீசார் விசாரித்தபோது, முன்னாள் கணவரின் மகளுக்கு, தனது 2வது கணவன் செய்த கொடுமை குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்றும், மகள் வயிற்றை, தான் கவனிக்கவில்லை என்றும் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications