ஹேப்பீ... ஹேப்பீ... ஹேப்பீ... சர்க்கஸ் சிங்கத்தின் முதல் ‘சுதந்திர’ அனுபவம்... ஒரு டச்சிங் வீடியோ!
ரியோ டி ஜெனிரோ: சர்க்கஸ் கூண்டில் அடைபட்டிருந்த சிங்கம் முதன்முறையாக சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் ஆனந்தமும், அது பூமியில் உருண்டு புரளும் செயல்களும் பதிவான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.
உலகில் உள்ள அனைத்து உயிரினங்களுமே சுதந்திரமாக வாழ்வதைத் தான் விரும்புகின்றன. ஆனால், ஆறறிவு படைத்த மனிதன் தன் சுயநலத்திற்காக செல்லப்பிராணிகள் என்ற பெயரில் பறவைகள் மற்றும் சில விலங்குகளை வீட்டிலும், சர்க்கஸில் யானை, சிங்கம், புலி போன்றவற்றை கூண்டுகளிலும் அடைத்து வைக்கிறான்.
காட்டிற்கே ராஜா எனக் கூறப்படும் சிங்கம், சர்க்கஸ் கூண்டுகளில் அடைக்கப்பட்டு, வேடிக்கைக் காட்டி இயந்திர வாழ்க்கை வாழும் அவலம் நேர்கிறது.

புல்வெளியில்...
அவ்வாறு பிரேசிலில் சர்க்கஸ் கம்பெனி ஒன்றில் பல ஆண்டுகள் கூண்டில் அடைபட்டுக் கிடந்த சிங்கம் ஒன்று வனவிலங்கு சரணாலயத்தில் புல்வெளியில் வெளியில் திறந்து விடப்படும் போது, அதன் மகிழ்ச்சி வீடியோவாக பதிவு செய்யப் பட்டுள்ளது.

ஆனந்தக் கூத்தாடுகிறது..
கூண்டுகளை விட்டு, கம்பிகளைத் தாண்டி வெளியே வரும் அந்தச் சிங்கம் தாங்க முடியாத ஆனந்தத்துடன் ஓடி வருகிறது. தாய்மண்ணைக் கண்ட மனிதர்கள் ஆனந்தத்தில் மண்ணில் விழுந்து புரள்வது போல, இந்தச் சிங்கமும் சுதந்திரக் காற்றை சுவாசித்து ஆனந்தக் கூத்தாடுகிறது.

அங்கும் இங்கும் ஓடி...
புல்வெளியில் உருண்டு, புரண்டு தன் மகிழ்ச்சியைக் கொண்டாடும் இந்தச் சிங்கம், சிறு குழந்தை போல மண்ணைக் கிளறி விளையாடுகிறது. செய்வது அறியாமல் அங்குமிங்கும் ஓடுகிறது.
5 ஆண்டுகள்...
இந்த வீடியோ கடந்த 2008ம் ஆண்டு எடுக்கப் பட்டது. அப்போது இந்த சிங்கத்திற்கு 13 வயது. சர்க்கஸில் வாழ்க்கையில் இருந்து மீண்டு, 5 ஆண்டுகள் சுதந்திரமாக வாழ்ந்த இந்தச் சிங்கம் கடந்த 2011ம் ஆண்டு தனது 13 வயதில் மரணமடைந்தது. தற்போது இந்த வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications