ஒருவர் கூட பிழைக்கவில்லை.. 62 பேரும் உயிரிழப்பு.. பிரேசில் விமான விபத்து நடந்தது எப்படி?
ரியோ: பிரேசிலின் சாவ் பாலோ மாநிலத்தில் 58 பயணிகளுடன் சென்ற விமானம் விபத்துக்குள்ளானது. நடுவானில் பறந்துகொண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த விமானம் தரையில் விழுந்து வெடித்து சிதறியது. இதில் அந்த விமானத்தில் பயணித்த பயணிகள், சிப்பந்திகள், விமானிகள் என அனைவரும் உயிரிழந்தனர். விமானம் விபத்துக்குள்ளாகும் வீடியோவும் வெளியாகியுள்ளது.
பிரேசில் நாட்டின் சாவ் பாலோவில் இருந்து வியோபாஸ் என்ற 2283 விமானம் வின்ஹெடோ நகர் அருகே சென்றுகொண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து கிழே விழுந்து நொறுங்கியது. கீழே விழுந்ததில் அந்த விமானத்தின் ஒரு பகுதி வெடித்து சிதறியது. இதில் அந்த விமானத்தில் இருந்த அனைவரும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான பிரேசிலில் ஏற்பட்ட இந்த விமான விபத்தில் பயணிகள் 62 பேரும் பலியாகியுள்ளனர். விமான விபத்தில் 62 பேர் பலியான சம்பவத்திற்கு பிரேசில் அதிபர் கடும் அதிர்ச்சி தெரிவித்து இருப்பதோடு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளார். இந்த விமான விபத்து தொடர்பாக விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளது.
இதனிடையே விமானம் பறந்து கொண்டிருந்த போதே கட்டுப்பாட்டை இழந்து வானத்தில் சுழன்றபடி கீழே விழும் பரபரப்பு சிசிடி காட்சிகள் வெளியாகியுள்ளன. குடியிருப்பு பகுதிக்குள் விமானம் விழுந்து தீபிடித்து எரியும் புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளன. விமானத்தின் கருப்பு பெட்டியை மீட்பு குழுவினர் கண்டறிந்துள்ளனர்.
அதேபோல, காக்பிட் அறையில் விமானிகள் கடைசி நிமிடத்தில் பேசிக்கொண்டதை பதிவு செய்யும் வாய்ஸ் ரெக்கார்டர் மற்றும் விமானத்தின் தரவு பதிவு கருவி ஆகியவையும் கிடைத்துள்ளது. இந்த கருவிகளை பிரேசிலியாவில் உள்ள ஆய்வகத்திற்கு அதிகாரிகள் அனுப்பி வைத்துள்ளனர். அதன்பிறகே விமானம் விபத்துக்கான உண்மையான காரணம் தெரியவரும்.

முன்னதாக இது டொடர்பாக வெளியான அறிக்கையில், பிரேசில் வின்ஹெடோ நகர் அருகே வானில் பறந்துகொண்டிருந்த போது திடீரென விமானம் கட்டுப்பாட்டை இழந்தது. இதையடுத்து அங்கும் இங்குமாக விமானம் வானில் வட்டமடித்தது. சுமார் 17,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்தது.
ஒரு நிமிடத்தில் அந்த விமானம் கீழே தரையில் விழுந்தது. தரையில் விழுந்த சில நொடிகளில் விமானத்தின் ஒரு பகுதி தீப்பிடித்து எரிந்தது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications