பிரேசிலில் 10 வயது சிறுமியை பலாத்காரம் செய்து இதயத்தை வெளியே எடுத்த கொடூரன் கைது
ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த 10 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து கொன்றுவிட்டு, அந்த சிறுமியின் இதயத்தை பிடுங்கி எடுத்த கொடூரனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
பிரேசிலில் மினாயிஸ் ஜெராய்ஸ் மாகாணத்தை சேர்ந்த சிறுமி ரெயானா அபரேசிதா காண்டிடா. 10, பள்ளிக்கு நடந்து சென்று கொண்டிருந்தாள்.

அப்போது அங்கு வந்த ஜெய்ரோ லோப்ஸ்,42 என்ற நபர், சிறுமி ரெய்னாவை பின் தொடர்ந்து சென்று கடத்தி சென்றான்.
பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொன்றுவிட்டு, அவளது இதயத்தை வெட்டி எடுத்துவிட்டு, அவனது வீட்டின் பின்புறம் சிறுமியின் உடலை புதைத்துவிட்டான்.
சிறுமியைக் காணாத பெற்றோர், காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், லோப்ஸை கைது செய்து விசாரித்ததில், நடந்த உண்மையை ஒப்புக் கொண்டான்.
இதையடுத்து, சிறுமியின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்தபோது, உடலில் இதயம் இல்லாதது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் 500 பேர் ஆவேசத்துடன் திரண்டனர். கொடூர காமுகனை அடித்து கொல்ல வேண்டும் என வலியுறுத்தினர். எனவே, கைது செய்யப்பட்ட ஜெய்ரோ லோப்ஸ் ஹெலிகாப்டர் மூலம் அழைத்துச் செல்லப்பட்டான்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications