120 வருடமாக பிசியாக இருக்கும் பாரம்பரிய மணமகள் கவுன்... 11-வது "திருமதி"க்குத் தயார்!
நியூயார்க்: தனது கொள்ளுப் பாட்டியின் 120 ஆண்டுகள் பழமையான திருமண கவுனை அணிந்து திருமதி ஆக இருக்கிறார் அமெரிக்க இளம்பெண் ஒருவர்.
பொதுவாக திருமணம் என்றாலே பளபளக்கும் புதிய ஆடைகளை வாங்கத் தான் அனைவரும் ஆசைப்படுவர். மணப்பெண், மணமகன் மட்டுமின்றி பல குடும்பங்களில் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்குமே புதிய உடைகள் எடுத்து தரும் வழக்கமும் பல இடங்களில் உள்ளது.
ஆனால், இவர்களில் இருந்து வேறுபட்டு 120 ஆண்டுகள் பழமையான கவுன் ஒன்றை விரும்பி தனது திருமணத்திற்கு அணிய உள்ளார் இளம்பெண் ஒருவர்.

கொள்ளுப்பாட்டியின் கவுன்...
அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தைச் சேர்ந்தவர் அபிகெய்ல் கிங்ஸ்டன். அடுத்தமாதம் இவருக்கு திருமணம் நடைபெற உள்ளது. அந்தத் திருமணத்தின் போது தனது கொள்ளுப்பாட்டியின் திருமண கவுனை அணிய ஆசைப்பட்டார் அபி.

பொலிவிழந்த கவுன்...
120 ஆண்டுகள் பழமையானது என்பதால் சற்று பொலிவிழந்த நிலையில் அந்த கவுன் அபிக்கு கிடைத்துள்ளது. ஆனாலும் அதனை ஆடை வடிவமைக்கும் பெண் ஒருவரிடம் அளித்து லேசாக மாற்றி அமைக்கச் சொல்லியிருக்கிறார்.

200 மணி நேர உழைப்பு...
கிட்டத்தட்ட 200 மணி நேர உழைப்பிற்குப் பின் அந்த கவுன் மீண்டும் புதிய உடை போன்ற பொலிவை அடைந்தது. இவ்வளவு பழைய கவுனுக்கு இந்தக் கடின உழைப்பு தேவையா எனக் கேட்கும் நண்பர்களிடம், அவர் இந்த கவுனை அணிய பன்னிரெண்டாவது மணமகளும் தயாராகிவிட்டதாகத் தெரிவித்துள்ளார் அபி.

11வது மணமகள்...
ஆம், இந்தக் கவுனை திருமணத்திற்கு அணியும் 11வது மணமகள் அபி. கடந்த 1895ம் ஆண்டு முதன்முறையாக அபியின் கொள்ளுப்பாட்டி ஒருவர் இதனை அவரது திருமணத்திற்கு புதிய ஆடையாக அணிந்துள்ளார்.

மூதாதையரின் அன்பு...
இந்தப் பழமையான கவுனை அணிவதன் மூலம் தனது குடும்ப மூதாதையரின் அன்பைப் பெறுவதைப் போல் உணார்கிறாராம் அபி.
ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பீலிங்ஸ்...












Click it and Unblock the Notifications