‘அன்பால்’ வானத்தை வளைக்கலாம்... அழ வைக்கும் பிரிட்டிஷ் ஏர்வேஸின் அழகிய விளம்பரம்!
லண்டன்: பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம்வெளியிட்டுள்ள புதிய விளம்பரம் உணர்ச்சிகரமானதாக உள்ளது. விளம்பரம் என்று மட்டும் பாராமல் அதில் உள்ள உணர்ச்சிப் பரிமாற்றமும், அன்பும்தான் மேலோங்கி நிற்கிறது.
இடம் வேறானாலும், மொழிகள் வேறானாலும், நாடுகள் வேறானாலும், கலாச்சாரங்கள் மாறுபட்டாலும் கூட அன்பு எப்போதும் பொதுவானதுதான் என்பதே இந்த விளம்பரத்தின் அர்த்தம்.
உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் இந்த விளம்பரம் உருவாக்கப்பட்டுள்ளது.
மூதாட்டியின் அறிமுகம்...
மாறுபட்ட பன்முகம் கொண்ட கலாச்சாரப் பெருமை கொண்டது இந்தியா. இந்த நாட்டுக்கு முதல் முறையாக வருகிறார் பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவன ஏர் ஹோஸ்டஸான ஹெலன் பிளிங். அவரது மனதுக்குள் கலவையான உணர்ச்சிகள். பயணத்தின்போது ஹைதராபாத்தைச் சேர்ந்த மூதாட்டியுடன் அறிமுகம் ஏற்படுகிறது.
அன்புத் தொல்லை...
அவருக்குள் மன பாரம். அதைக் குறைத்து ஆசுவாசப்படுத்தி தனது அன்பான உபசரிப்பால் அவரது மனதைக் கொள்ளை கொள்ளுகிறார் ஹெலன். அதன் பின்னர் ஹைதராபாத் சென்று சேர்ந்ததும், மூதாட்டியின் அன்பான வலியுறுத்தலால், அவரது வீட்டுக்குச் செல்கிறார்.
கர்ச்சீப் பரிசு...
அவரது குடும்பத்தினருடன் பழகுகிறார். பாட்டி அவருக்கு அன்பான கவனிப்புடன் தானே தனது கையால் பின்னிய சின்ன கர்ச்சீப்பைக் கொடுக்கிறார். அதைப் பார்த்து நெகிழ்ந்து போகிறார் இங்கிலாந்து ஏர் ஹோஸ்டஸ்.
இயல்பான விளம்பரம்...
மறக்க முடியாத அன்புப் பொக்கிஷத்தை மனதில் சுமந்தபடி தனது நாட்டுக்குத் திரும்புகிறார். அழகான அன்பை அதன் இயல்பிலேயே நேர்த்தியாக சொல்லிச் செல்கிறது பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்தின் இந்த விளம்பரம்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications