பாகிஸ்தான் சிறுமியை கடத்தி, கற்பழித்த 84 வயது தாத்தா குடும்பத்தோடு கைது

Subscribe to Oneindia Tamil

லண்டன்: 10 வயது சிறுமியை சித்ரவதை செய்து, பாதாள அறையில் அடைத்து பாலியல் பலாத்காரம் செய்து வந்த 84 வயது முதியவரைப் போலீசார் கைதுசெய்துள்ளனர்.

இங்கிலாந்தில் உள்ள மான்செஸ்டர் நகரில் வாழ்ந்து வந்த இலியாஸ் அஸ்கார் (84) என்ற முதியவர், பாகிஸ்தானை சேர்ந்த 10 வயது உடல் ஊனமுற்ற சிறுமியை கடத்தி வந்து, தனது வீட்டின் பாதாள அறையில் அடைத்து வைத்துள்ளார்.

அச்சிறுமி காது கேளாத, வாய் பேச முடியாதவள் என்பதால் அவளால் யாரிடமும் உதவி கேட்க இயலாமல் போயுள்ளது. இந்நிலையில், இலியாஸ் மற்றும் அவரது மனைவி தால்லட் அஸ்கர் (68) ஆகியோர் சிறுமியை வேலைக்காரி போல் நடத்தி கொடுமைப் படுத்தியுள்ளனர்.

அச்சிறுமியின் ஊனத்தைக் காரணம் காட்டி அரசிடமிருந்தும் ரூ30 லட்சம் வரை சலுகைகள் பெற்றுள்ளனர் அத்தம்பதிகள். இதற்கிடையே அச்சிறுமியை பாலியல் ரீதியாகவும் துன்புறுத்தி வந்துள்ளார் இலியாஸ். பலமுறை அச்சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளாராம் இலியாஸ்.

பின்னர், போலீசாரால் மீட்கப்பட்டாள் அச்சிறுமி. அதனைத் தொடர்ந்து, இலியாஸ் அஸ்கர், அவரது மனைவி தல்லாட் அஸ்கர், மகள் பாயிஷா அஸ்கர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். சிறுமியைக் கடத்தி பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக இவர்கள் மீது மான் செஸ்டர் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதி, 13 பிரிவுகளில் அஸ்கர் மற்றும் அவரது குடும்பம் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும், வரும் 23ம் தேதி தண்டனை விவரம் தெரிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+