பஹாமாஸில் 13 வயது சிறுவன் கண் முன்னே தந்தையை சுட்டுக் கொன்ற கொள்ளையர்கள்
பஹாமாஸ்: பஹாமாஸில் உள்ள வீடு ஒன்றுக்குள் புகுந்த கொள்ளையர்கள் 13 வயது சிறுவன் கண் முன்பே அவரது தந்தையை சுட்டுக் கொன்றுள்ளனர்.
இங்கிலாந்தைச் சேர்ந்தவர் எட்கர் டார்ட்(56). கனடாவில் வசித்து வரும் அவர் பஹாமாஸில் வசிக்கும் தனது 79 வயது தாய் ஜாயை பார்க்க குடும்பத்துடன் வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 7 மணி அளவில் ஜாயின் வீட்டுக்குள் புகுந்த முகமூடி கொள்ளையர்கள் 3 பேர் அங்கிருந்தவர்களை கட்டிப் போட்டனர். ஆனால் எட்கர் மட்டும் அவர்களை எதிர்த்து போராடினார். உடனே அவர்கள் எட்கரை சுட்டனர்.
இந்த கொடூர சம்பவம் கட்டப்பட்ட அவரது 13 வயது மகன் ஜார்ஜ் மற்றும் 5 உறவினர்களின் கண் முன்பே நடந்தது. எட்கர் உதவிக்கு ஆளில்லாமல் துடிதுடித்து ரத்த வெள்ளத்தில் இறந்தார்.
எட்கரை சுட்ட கொள்ளையர்கள் வீட்டில் இருந்த நகை மற்றும் பணத்தை திருடிக் கொண்டு தப்பியோடிவிட்டனர். அதன் பிறகு கட்டி வைக்கப்பட்ட உறவினர்களில் ஒருவர் கட்டை அவிழ்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
பஹாமாஸ் தீவில் குற்றங்கள் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications