பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் -அக்ஷா மூர்த்தி தம்பதிக்கு ஒரே ஆண்டில் இத்தனை கோடி இழப்பா?

Subscribe to Oneindia Tamil

லண்டன்: பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் மற்றும் அவரது மனைவி அக்ஷா மூர்த்தி தம்பதி ஒரே ஆண்டில் 2069 கோடியை இழந்துள்ளனர். சண்டே டைம்ஸ் வெளியிட்ட பணக்கார பட்டியலில் இந்த ஜோடி கடந்த ஆண்டு 222வது இடத்தில் இருந்த நிலையில், இந்த ஆண்டு 5527 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் 275வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.

பிரிட்டன் பிரதமராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் கடந்த ஆண்டு அக்டோபரில் பதவியேற்றார். இவர் இன்போசிஸ் நிறுவனத்தின் நிறுவனர் இன்போசிஸ் நாராயண மூர்த்தியின் மருமகன் ஆவார். நாராயண மூர்த்தியின் மகள் அக்ஷா மூர்த்தியை ரிஷி சுனக் திருமணம் செய்துள்ளார்.

British Prime Minister Rishi Sunak and his wife Aksha Murthy lost Rs 2069 crore in a single year

ரிஷி சுனக் கடந்த ஆண்டு அக்டோபரில் பிரிட்டன் பிரதமராக பொறுப்பேற்ற போது, அவருக்கு ஆண்டு சம்பளமாக 1.69 கோடி சம்பளமாக வழங்கப்பட்டது. இந்த ஆண்டும் அதே சம்பளம் தான் வழங்கப்படுகிறது. பிரிட்டன் நாட்டின் அதிகாரமிக்க தலைவராக உயர்ந்த ரிஷி சுனக்கிற்கு பிரதமருக்கான நல்ல சம்பளம் கிடைத்த போதும், சொத்து மதிப்பு உயரவில்லை. மாறாக கடுமையாக சரிந்துள்ளது.

பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் மற்றும் அவரது மனைவி அக்ஷதா மூர்த்தியின் சொத்து மதிப்பு கடந்த பன்னிரண்டு மாதங்களில் பெரிய அளவில் சரிந்துள்ளது. கடந்த ஆண்டு 730 மில்லியன் பவுண்டுகளாக இருந்த இந்த ஜோடியின் சொத்து மதிப்பு 529 மில்லியன் பவுண்டுகளாக ($668 மில்லியன்) சரிந்துள்ளது.

இன்போசிஸ் நிறுவனத்தில் ஏற்பட்ட பங்கு வீழ்ச்சி உள்ளிட்ட காரணங்களால் இந்த ஜோடியின் சொத்து மதிப்பு சுமார் 2069 அளவிற்கு ஒரே ஆண்டில் குறைந்துள்ளது. தற்போது பிரதமர் ரிஷி சுனக் மற்றும் அவரது மனைவி அக்ஷா மூர்த்தி தம்பதிக்கு சுமார் 5527 கோடி ரூபாய் சொத்துக்கள் இருக்கிறது.

சொத்து மதிப்பு சரிவு காரணமாக சண்டே டைம்ஸ் பணக்காரர்கள் பட்டியலின் பிரதமர் ரிஷி சுனக் மற்றும் அவரது மனைவி அக்ஷா மூர்த்தி ஜோடி 222 வது இடத்தில் இருந்து 275 வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.

பிரிட்டன் பிரதமருக்கு மட்டுமல்ல, அங்குள்ள மக்களின் வாழ்க்கையும் பொருளாதார நெருக்கடியில் தான் இருக்கின்றன. அங்குள்ள எதிர்க்கட்சிகள் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கை , பொருளாதார நெருக்கடிக்காக கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றன. பல பிரிட்டன்வாசிகள் ஏழ்மையில் இருக்கும் நேரத்தில், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், சாதாரண மக்களுடன் தொடர்பில் இல்லை என்று எதிர்க்கட்சிகள் திட்டி வருகின்றன.

British Prime Minister Rishi Sunak and his wife Aksha Murthy lost Rs 2069 crore in a single year

பிரிட்டனில் பணவீக்கம் 10% க்கும் அதிகமாக உள்ளது. அங்குள்ள மக்களுக்கு ஊதியங்கள் வேகமாக உயரவில்லை, குடும்பம் வருமானம் போதாமல் அழுத்ததில் உள்ளன. "வாழ்க்கைச் செலவு நெருக்கடி" பிரிட்டனையே கலங்க வைத்து வருகிறது. அந்நாட்டில் தலைப்பு செய்தியாகவே இந்த விவகாரம் தற்போது உள்ளது. இந்நிலையில் பிரதமர் ரிஷி சுனக் பணவீக்கத்தை பாதியாக குறைத்து பொருளாதாரத்தை எப்படியாவது வளர்ப்பேன் என்று அந்நாட்டு மக்களுக்கு உறுதி அளித்துள்ளார்.

பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் லண்டனில் நம்பர் 10 டவுனிங் தெருவில் வசிப்பவர்களில் மிகப் பெரிய பணக்காரர் ஆவார். அவர் கடந்த ஆண்டு கூறும் போது "நம் நாட்டில், மக்களை அவர்களின் வங்கிக் கணக்கின் அடிப்படையில் அல்ல, அவர்களின் குணம் மற்றும் அவர்களின் செயல்களால் மதிப்பிடுகிறோம்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+