துபாயில் மிளிர்ந்த மூவர்ணக் கொடி.. பிரதமர் மோடியை வரவேற்க புர்ஜ் கலிபாவில் இடம் பெற்ற வாசகம் என்ன?
அபுதாபி: ஐக்கிய அரபு நாடுகளுக்கு 2 நாட்கள் பயணமாக சென்ற பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்க உலகின் மிக உயர்ந்த கட்டடமான துபாய் புர்ஜ் கலிபா இந்தியக் கொடியால் மிளிர்ந்தது.
பிரதமர் நரேந்திர மோடி 2 நாட்கள் பயணமாக நேற்றைய தினம் ஐக்கிய அரபு அமீரகம் புறப்பட்டு சென்றார். அப்போது பிரதமர் மோடிக்கு துபாய் பட்டத்து இளவரசர் ஷேக் அம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் வரவேற்றார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான உறவுகள் சர்வதேச ஒத்துழைப்புக்கு முன் மாதிரியாக விளங்குவதாக அவர் குறிப்பிட்டிருந்தார். ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவர் ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூமின் அழைப்பின் பேரில் பிரதமர் நரேந்திர மோடி துபாய் சென்றார்.
அங்கு உலக அரசு உச்சி மாநாட்டில் 2024 ஆம் ஆண்டுக்கான கௌரவ விருந்தினராக பங்கேற்கிறார். அந்த மாநாட்டில் அவர் உரையாற்றவும் செய்கிறார். பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக ஐக்கிய அமீரகம் சென்றுள்ள நிலையில் அவர வரவேற்க கௌரவ விருந்தினர்- இந்தியா என்ற வார்த்தைகளுடனும் மூவர்ணக் கொடியுடனும் புர்ஜ் கலிபா மிளிர்ந்தது.
இதுகுறித்து துபாய் இளவரசர் ஷேக் அம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, இந்த ஆண்டு நடைபெறும் உலக அரசு உச்சி மாநாட்டுக்கு கவுரவ விருந்தினராக வரும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்கிறோம். இரு நாடுகளுக்கு இடையே உள்ள வலுவான உறவுகள் சர்வதேச ஒத்துழைப்புக்கு சிறந்த உதாரணமாக உள்ளது. சிறந்த நடைமுறைகள், வெற்றி கதைகள், முன்னெடுப்புகள், அரசின் எதிர்காலம் உள்ளிட்டவைகளை பகிர்ந்து கொள்ள உச்சி மாநாடு மிகப் பெரிய தளமாக அமையும். இந்த சர்வதேச மாநாட்டில் கவுரவ விருந்தினராக இந்தியா கலந்து கொள்வது மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இரு நாள் பயணமாக ஐக்கிய அரபு நாடுகள் சென்றுள்ள மோடியின் பயண திட்டம் என்ன தெரியுமா?
- இந்திய நேரப்படி பகல் 12.30- 1.30 மணி வரை ஐக்கிய அரபு நாடுகளின் துணைத் தலைவர் மற்றும் உயரதிகாரிகளுடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை
- மதியம் 1.40 மணிக்கு பாரத் மார்ட்டை தொடங்கி வைக்கிறார் (பாரத் மார்ட் என்பது இந்திய ஏற்றுமதியாளர்களின் தயாரிப்புகள் ஒரே கூரையின் கீழ் காட்சிப்படுத்தப்படும்)
- மதியம் 1.50 மணிக்கு உலக அரசு உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி உரை
- மாலை 6 மணிக்கு அபுதாபியில் உள்ள இந்து கோயிலை திறந்து வைக்கிறார்.
அபுதாபியின் சுவாமி நாராயண் கோயிலை இன்று பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள முதல் இந்து கோயில் இதுவாகும். சுமார் ரூ 700 கோடியில் கட்டப்பட்டது. இந்த கோயிலில் கங்கை நதியிலிருந்து நீர் கொண்டு செல்லப்பட்டு செயற்கை நதி உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த இரு நாட்கள் பயணத்திற்காக ஐக்கிய அரபு நாடுகள் சென்ற பிரதமர் மோடியை ஐக்கிய அரபு அமீரக அதிபர் அல் நஹ்யான் விமான நிலையத்தில் வரவேற்றார். இருவரும் ஆரத்தழுவி அன்பை பரிமாறிக் கொண்டனர். 2015ஆம் ஆண்டுக்குப் பிறகு பிரதமர் மோடி ஐக்கிய அரபு அமீரகத்திற்கு செல்வது இது 7-வது முறையாகும், கடந்த 8 மாதங்களில் இது மூன்றாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications