அபுதாபி அருகே விபத்து... மெக்காவுக்கு புனித பயணம் சென்ற 3 இந்தியர்கள் பலி- 57 பேர் காயம்
துபாய்: மெக்காவுக்கு புனித பயணம் சென்ற இந்தியர்கள் பயணித்த பஸ் விபத்துக்குள்ளாகி 3 பேர் உயிரிழந்தனர், 57 பேர் காயமடைந்தனர்.
துபாயில் வேலை பார்த்து வரும், கேரள மாநிலம் பாலக்காடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களை சேர்ந்த முஸ்லிம்கள் சுமார் 60 பேர் சேர்ந்து மெக்காவுக்கு புனித யாத்திரை சென்றனர். கடந்த 6ம் தேதி கிளம்பிய அவர்கள், சனிக்கிழமை மாலையில், மெக்காவில் இருந்து தாங்கள் பயணித்த பஸ்சிலேயே துபாய் திரும்பினர்.
அந்த பஸ், அபுதாபி நகரில் இருந்து சுமார் 200 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள அபு அல் அப்யாத் என்ற பகுதியில் சென்றபோது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரத்தில் கவிழ்ந்தது. இதில் பஸ்சில் பயணித்த முகமது மவுலவி (40), அபு பக்கிர் (46) மற்றும் அப்துல் லத்தீப் (38) ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் காயமடைந்த எஞ்சிய 57 பேரில், 12 பேர் நிலைமை மிகவும் மோசமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த பஸ்சை ஓட்டிச் சென்றது அப்துல் லத்தீப் ஆகும். இவருக்கு மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். அவர்கள் கேரளாவிலுள்ளனர். மவுலவிக்கும், மனைவியும், 3 குழந்தைகளும் கேரளாவிலுள்ளனர். சம்பவம் நடந்த அன்றுதான், லத்தீப் தனது குடும்பத்தாருக்கு போன் செய்து, பயணத்தில் கிடைத்த நல்ல அனுபவங்களை கூறி மகிழ்ந்துள்ளார். மேலும், அடுத்த மாதம் சொந்த ஊர் வருவதாகவும், வீட்டு புதுமனை புகுவிழாவை முடிப்பதுடன், தனது 28 நாள் கைக்குழந்தையை பார்க்க விரும்புவதாகவும் போனில் கூறியுள்ளார்.
அபு பக்கீருக்கு மனைவியும், 4 குழந்தைகளும் உள்ளனர். அவர், இந்த சுற்றுலாவின் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டுள்ளார். டிரைவரின் அஜாக்கிரதை இந்த விபத்துக்கு காரணம் என்று போலீசார் தெரிவிக்கின்றனர். ஹஜ் மாதத்தை தவிர்த்து பிற மாதங்களில் மெக்காவுக்கு புனித யாத்திரை செல்லுவது, உம்ரா என்றழைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications