Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

BRICS+ கெத்தா.. வெத்தா? அமெரிக்கா, ஐரோப்பாவுக்கு மாற்றாக வளருமா! நிபுணர்கள் சொல்வது இதுதான்

Subscribe to Oneindia Tamil

பெய்ஜிங்: சர்வதேச அளவில் பொருளாதார விஷயத்தில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு மாற்றாக பிரிக்ஸ் வளர்ந்து வருகிறது. ஆனால், அரசியல் விஷயங்களில் இதன் தலையீடு போதுமான அளவுக்கு இல்லையோ என பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பியுள்ளனர். அரசியலில் தலையீடு இல்லையெனில் பிரிக்ஸின் வளர்ச்சி முழுயடையாது. இந்த சூழலில், பிரிக்ஸ் சர்வதேச அளவில் 3வது சக்தியாக உருவெடுக்குமா? என்பது பற்றி நிபுணர்கள் விளக்கியுள்ளனர்.

4 தினங்களுக்கு முன்னர் என்டிடிவியின் செய்தி இணையத்தில் ஒபினியன் கட்டுரை ஒன்று வெளியாகியிருந்தது. சையது சுபைர் அகமது எழுதியிருந்த இந்த கட்டுரை மிகுந்த கவனம் பெற்றிருக்கிறது.

BRICS US Europe NATO

ஐரோப்பாவுக்கு ஆப்பு:

அதில் பிரிக்ஸ் அமைப்பின் செயல்பாடுகள் பற்றி பரிசீலனை செய்யப்பட்டிருக்கிறது. குறிப்பாக நேற்றுவரை அமெரிக்காவின் கூட்டாளியாக இருந்த ஐரோப்பா, தற்போது 2வது பெரிய அரசியல் சக்தியாக உருவெடுத்திருப்பது பற்றி விளக்கப்பட்டிருக்கிறது. இந்த மோதலுக்கு முக்கிய காரணம் உக்ரைன்-ரஷ்யா போர்தான். இந்த போரில் டிரம்ப் தடாலடியாக ரஷ்ய அதிபர் புதினுக்கு சப்போர்ட் செய்திருந்தார். இதை யாரும் எதிர்பார்க்கவில்லை. குறிப்பாக ஐரோப்பா கனவில் கூட இதை நினைக்கவில்லை.

2வது பெரிய சக்தியாக வளர்ச்சி:

ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள், முக்கிய புள்ளிகள் இந்த விவகாரம் தொடர்பாக டிரம்ப்பை நேரில் சென்று சந்தித்திருந்தனர். இருப்பினும் அவர் வழிக்கு வரவில்லை. தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள்தான் என்பதில் டிரம்ப் உறுதியாக இருந்தார். எனவே அமெரிக்கா மீதான நம்பிக்கை ஐரோப்பாவுக்கு தளர்ந்தது. டிரம்ப்பை நம்பி இனி எதுவும் நடக்காது, நேரடியாக நாமே கோதாவில் இறங்குவோம் என, உக்ரைனுக்கு ஆயுத உதவியை ஐரோப்பிய நாடுகள் செய்ய தொடங்கின. இப்படியாக 2வது பெரிய அரசியல் சக்தியாக ஐரோப்பா வளர்ந்திருக்கிறது.

BRICS-ன் செயல்பாடுகள்

ஆக உலகத்தை ஆட்டி படைக்க வேண்டும் என்கிற நோக்கத்தில் தற்போது 2 பெரும் சக்திகள் அலைய தொடங்கியிருக்கின்றன. இதிலிருந்து ஆசிய நாடுகளை காப்பாற்ற பிரிக்ஸ் ரட்சகரை போல வருமா? என்று எதிர்பார்ப்பு எழுந்திருந்தது.

தொடக்கத்தில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா என 5 நாடுகள் மட்டும் கொண்ட அமைப்பாக உருவான பிரிக்ஸ், 2024ல் 10 நாடுகள் கொண்ட அமைப்பாக BRICS+ என உருமாற்றம் அடைந்திருந்தது. உலக பொருளாதாரத்தில் தவிர்க்க முடியாத சக்தியாக பிரிக்ஸ் இருக்கிறது. எந்த அளவுக்கு எனில், IMF மற்றும் உலக வங்கிக்கு மாற்றாக அமைப்பை உருவாக்கும் அளவுக்கு பிரிக்ஸ் வலுவாக இருக்கிறது.

பிரிக்ஸ் ரட்சகரா?:

எனினும் தனித்து செயல்படாமல், பொருளாதார கட்டமைப்பாக மட்டுமே இருக்கும் பிரிக்ஸ் உலகின் மூன்றாவது சக்தியாக இது உருவாகுமா? என்கிற கேள்வியை பலரும் எழுப்பியிருக்கின்றனர்.

சிரியா விஷயத்தில் பிரிக்ஸின் செயல்பாடுகள் பூஜ்ஜியமாக இருந்திருக்கிறது. அமெரிக்கா ஆதரவு பெற்ற குழுக்கள் அந்நாட்டை கைப்பற்றும் போது, பிரிக்ஸ் மௌனமாக இருந்தது. உக்ரைன் போரிலும் இதே நிலைமைதான். அமெரிக்காதான் சமாதானத்திற்கு வந்ததே தவிர, ரஷ்யா போரை நடத்துவதிலேயே குறியாக இருந்தது.

பிரிக்ஸ் கெத்தா?:

தென் ஆப்பிரிக்கா தூதுவரை அமெரிக்கா, தனது நாட்டை விட்டு வெளியேற்றும்போதும் கூட பிரிக்ஸ் வாய் திறக்கவில்லை. இதையெல்லாம் சுட்டிக்காட்டிதான் பிரிக்ஸ் வெறும் பொருளாதார கட்டமைப்பாக சுருங்கி விடக்கூடாது என்று சர்வதேச அரசியல் விமர்சகர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

சர்வதேச அரசியலில் முக்கியமான தீர்வுகளை பிரிக்ஸ் முன்மொழிய வேண்டும். பல்வேறு நாடுகளின் நலன்களை பாதுகாக்கவும், குறிப்பாக தென்னாப்பிரிக்கா போன்ற நட்பு நாடுகளின் நலனை பாதுகாக்கவும் பிரிக்ஸ் முன் வர வேண்டும்.

இவையெல்லாம் தான் பிரிக்ஸை கெத்தானதாக மாற்றும் என்றும் சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் வாசகர்களே!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+