இந்தியர்களுக்கு 'கனடா சென்ற பின் விசா' வாங்கும் வசதி: கனடா பிரதமர் அறிவிப்பு
ஒட்டாவா: இந்தியர்களுக்கு கனடா சென்ற பின் விசா வாங்கும் வசதியை அந்நாட்டு பிரதமர் ஸ்டீபன் ஹார்பர் அறிவித்துள்ளார். இதன் மூலம் இந்தியர்களுக்கு இந்த வசதியை அளிக்கும் 51வது நாடாக கனடா இணைந்துள்ளது.
பிரான்ஸ், ஜெர்மனி, கனடா ஆகிய மூன்று நாடுகள் சுற்றுப்பயணத்தை மோடி மேற்கொண்டுள்ளார். இந்த சுற்றுப் பயணத்தின் இறுதியாக கனடா சென்றுள்ள மோடி, ஒட்டவா நகரில் அந்த நாட்டின் பிரதமர் ஸ்டீபன் ஹார்பரை சந்தித்து பேசினார்.

அதனை தொடர்ந்து இந்தியா - கனடா இடையே அணுசக்தி ஒப்பந்தம் குறித்து கையெழுத்தானது. அதன் பின் இரு நாட்டு தலைவர்களும் கூட்டாக பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தனர்.
அப்போது பிரதமர் மோடி கூறியதாவது:
பயங்கரவாதத்துக்கு எதிராகப் போராட, மனிதநேயத்தில் நம்பிக்கையுள்ள அனைவரும் ஒன்றிணைய வேண்டும். பயங்கரவாதத்துக்கு எதிராக ஒருங்கிணைந்து போராட, ஐ.நா. தீர்மானம் தேவைப்படுகிறது. உலகம் முழுவதும் பயங்கரவாத அச்சுறுத்தல் அதிகரித்து வருகிறது. பயங்கரவாதத்துக்கு இனமோ, நிறமோ கிடையாது.
பயங்கரவாதத்தை முறியடிக்க எங்களின் ஒத்துழைப்பை அதிகரிக்க உள்ளோம். கடந்த ஆண்டு கனடா நாடாளுமன்றத்தின் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் கண்டனத்துக்குரியது. நாடாளுமன்றம் என்பது ஜனநாயகத்தின் கோயிலாகும். இதன் மீது நடத்தப்படும் தாக்குதல், ஒரு கட்டடத்தின் மீது நடத்தப்படும் தாக்குதல் அல்ல. அது ஜனநாயகத்தின் மீது நடத்தப்படும் தாக்குதலாகும்' என்றார்.
மேலும், கனடா நாட்டவர்களுக்காக, தாராளமான விசா கொள்கையை பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். "இந்த புதிய விசாக் கொள்கை மூலம் இருநாட்டு மக்கள் இடையிலான தொடர்புகள் மேம்படும்' என அவர் தெரிவித்தார்.
மோடியைத் தொடர்ந்து பேசிய கனடா நாட்டின் பிரதமர் ஸ்டீபன் ஹார்பர், ‘அடுத்த 5 ஆண்டுகளுக்கு இந்தியாவிற்கு கனடா யுரேனியம் சப்ளை செய்யும்' என்றார்.
அதேபோல், ‘கனடா சென்ற பின் விசா வாங்கும் வசதியை இந்தியர்களுக்கு அளிப்பதாக' அவர் அறிவித்தார்.
இந்தியர்களுக்கு இந்த வசதியை அளிக்கும் 51வது நாடு கனடா என்பது குறிப்பிடத்தக்கது.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications