அதிர்ச்சி கொடுத்த கனடா அரசு! வெளிநாட்டு மாணவர்களுக்கான விரைவு விசா திட்டம் திடீரென நிறுத்தம்!
ஒட்டாவா: கனடாவில் நடைமுறையில் இருந்த 'ஸ்டூடண்ட் டைரக்ட் ஸ்ட்ரீம் (SDS) விசா திட்டத்தைக் கைவிடுவதாக கனடா அரசு அறிவித்துள்ளது. கனடா அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இதுகுறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வெளிநாட்டு மாணவர்களுக்கான விரைவு விசா வழங்கும் நடைமுறையை உடனடியாக நிறுத்துவதாக கனடா அரசு அறிவித்துள்ளது.
கனடாவில் SDS என்ற 'ஸ்டூடண்ட் டைரக்ட் ஸ்ட்ரீம்' திட்டம் கடந்த 2018-ஆம் ஆண்டு, கல்லூரி படிப்பை மேற்கொள்ள கனடாவில் விண்ணப்பிக்கும் வெளிநாட்டு மாணவர்களின் விண்ணப்பங்களை விரைவாக பரிசீலனை செய்ய உருவாக்கப்பட்ட திட்டம். இந்த திட்டத்தின் மூலமாக இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் பயன்பெற்று வந்தனர்.

படிப்பதற்காகவும், வேலைக்காவும் வெளிநாட்டினர் அதிகளவில் கனடா வருவதால் அங்கு குடியிருக்க வீடு கிடைப்பது சிரமமாகிவிட்டது. மேலும், அங்கு குடியேறும் மக்களுக்கு இதர வசதிகள் செய்து தருவதிலும் சிக்கல் ஏற்பட்டது. வேலை கிடைப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் சர்வதேச மாணவர்களுக்கு விரைவு விசா நடைமுறையை கனடா நிறுத்தியுள்ளது.
கனடாவில் கடந்த 6 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த "ஸ்டூடண்ட் டைரக்ட் ஸ்ட்ரீம்" (SDS) மற்றும் NSE விசா திட்டங்களை நவம்பர் 8 ஆம் தேதி 2 மணியுடன் கைவிடுவதாக கனடா அரசு அறிவித்துள்ளது. கனடா அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இதுகுறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இனிவரும் காலத்தில் கனடாவில் படிக்க விரும்பும் மாணவர்களை நேரடியாக தற்போது நடைமுறையில் உள்ள வழக்கமான கல்வி அனுமதி திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும்படி கனடா அரசாங்கம் கேட்டுக் கொண்டுள்ளது. வெளிநாட்டு மாணவர்களுக்கான படிப்பு அனுமதி விண்ணப்பங்களை சரிபார்க்கும் செயல்முறையை நியாயமாகவும், சமமாகவும் வைத்திருக்க கனடா உறுதியளிப்பதாக தெரிவித்துள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் போது உத்தரவாதம் அளிக்கப்பட்ட முதலீட்டு ஆவணங்களை, மாணவர்களின் தற்போதைய நிதி நிலையை அறிந்து கொள்வதற்கான ஆதாரங்களாக வழங்க வேண்டும் என்றும் கனடா அறிவித்துள்ளது. சர்வதேச நாடுகளில் இருந்து கனடாவில் படிக்க மாணவர்களை தொடர்ந்து வரவேற்போம் என்றும் கனடா கூறியுள்ளது.
எஸ்.டி.எஸ் திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதன் காரணமாக சர்வதேச மாணவர்கள் கனடாவில் படிக்க விசா பெறுவதற்கு இனி நீண்ட காலம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படும். மாணவர்களுக்கான விரைவு விசாவை கனடா அரசு நிறுத்தியுள்ளதால், அங்கு படிக்க விரும்பும் இந்திய மாணவர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே, இந்தியா - கனடா இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டதன் காரணமாக சுமூகமான சூழல் இல்லாத நிலையில் மாணவர்களுக்கான விரைவு விசா சேவையை கனடா அரசு திடீரென நிறுத்தியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications