தூக்குல போடுங்க அவனை.. எங்க வீட்டு விளக்கு அணைஞ்சு போச்சுங்க.. கொந்தளிக்கும் பெற்றோர்!
மனைவியை கணவன் கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டார்
Recommended Video
டோரண்டோ: "வெளிநாட்டு மாப்பிள்ளை, நல்லா பார்த்துப்பாருன்னு நினைச்சுதான் எங்க பொண்ணை தந்தோம். இப்போ எங்க வீட்டு விளக்கு அணைந்துவிட்டது.. தூக்குல போடுங்க அவனை" என்று கொதித்து போய் சொல்கின்றனர் பெற்றோர்!
தர்ஷிகாவுக்கு வயசு 27. இலங்கை வாழ் தமிழர். இலங்கையில் வசித்த போது தனபாலசிங்கம் என்பவரை காதலித்து கல்யாணம் செய்து கொண்டார். தர்ஷிகாவுக்கு 2 சகோதரர்கள், 2 சகோதரிகள் உள்ளனர்.
தனபாலசிங்கத்துக்கு கனடாவில் வேலை கிடைத்துவிட்டது. ஆனால், தர்ஷிகா இலங்கையில்தான் தங்கியிருந்தார். பிறகு 2017-ல்தான் கனடா சென்றார்.

குடும்பம்
தர்ஷிகாவின் குடும்பம் ரொம்பவும் ஏழ்மையானது. அதனால் கனடாவில் ஏதாவது வேலை பார்த்து குடும்பத்துக்கு உதவலாம் என்று நினைத்தார். இதில்தான் தம்பதிக்குள் சண்டையும் தகராறும் ஏற்பட்டது. இவர்களை குடும்பத்தினராலும் சமாதானம் செய்ய முடியவில்லை.

தீர்ப்பு
அதனால் விஷயம் கோர்ட் வரை வந்துவிட்டது. வழக்கை விசாரித்த நீதிபதியும் தனபாலசிங்கம் தர்ஷிகாவை சந்திக்க கூடாது என்று தீர்ப்பளித்திருந்தார். ஆனால், தீர்ப்பையும் மீறி தனபாலசிங்கம் தர்ஷிகாவை சந்தித்ததுடன், கத்தியை கையில் எடுத்துக்கொண்டு துரத்தி துரத்தி கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டார். இதை அங்கிருந்த பொதுமக்களே நேரில் பார்த்துள்ளனர்.

வழக்கு
மனைவியை கொன்றுவிட்டு, ஸ்டேஷனில் தனபாலசிங்கம் சரணடைந்தார். இதையடுத்து, அவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரித்து வருகிறார்கள். ஆனால் மகளை பறிகொடுத்த தர்ஷிகாவின் பெற்றோர் வயிறு எரிந்து போயுள்ளனர்.

கதறும் பெற்றோர்
"வெளிநாட்டு மாப்பிள்ளை, நல்லா பார்த்துப்பாருன்னு நினைச்சுதான் எங்க பொண்ணை தந்தோம். இப்போ எங்க வீட்டு விளக்கு அணைந்துவிட்டது. என் பொண்ணை இந்த நிலைக்கு ஆளாக்கியவனை தூக்குல போடுங்க. எங்க அழுகுரல் கனடா நாட்டிலுள்ள நீதித்துறையினருக்கு கேட்கணும்" என்று கதறுகின்றனர். இந்த சம்பவம், கனடாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications