"நாங்கள் செய்தது தவறு தான்.." பகிரங்க மன்னிப்பு கேட்ட கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ.. என்ன காரணம்
ஒட்டவா: கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெளிப்படையாக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் மன்னிப்பு கேட்டுள்ளார். அவர் எதற்காக இப்படி மன்னிப்பு கோரினார் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையே கடந்த சில காலமாகவே மோதல் போக்கு நிலவி வருவது அனைவருக்கும் தெரியும். கனடாவில் காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் கொலையில் இந்திய ஏஜெண்டுகளுக்கு தொடர்பு இருக்கலாம் என அந்நாட்டுப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சொன்னதே இதற்குக் காரணமாகும்.

இந்தியா பல முறை வலியுறுத்தியும் கூட இதற்கான ஆதாரங்களை வெளியிடக் கனடா தொடர்ந்து மறுத்தே வருகிறது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு மிகக் கடுமையாகவே பாதிக்கப்பட்டுள்ளது. இரு நாடுகளும் இதில் பல நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.
கனடா: இந்த விவகாரத்தில் கனடா எதிர்பார்த்ததுப் போல உலக நாடுகள் கனடாவுக்கு ஆதரவாக வரவில்லை. இதுவே கனடாவுக்குச் சிக்கலாக இருக்கும் நிலையில், இப்போது கனடா மற்றொரு புதிய சிக்கலை எதிர்கொண்டிருக்கிறது. அதாவது கடந்த வாரம் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி கனடா சென்ற போது, அங்கே நாடாளுமன்றத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது அங்கிருந்த முன்னாள் உக்ரைன் ராணுவ வீரர் நாடாளுமன்றத்தில் கவுரவிக்கப்பட்டார்.
அவர் உக்ரைன் விடுதலைக்காகப் பாடுபட்டார் எனக் கூறி, ஒட்டுமொத்த கனடா நாடாளுமன்றமும் எழுந்து நின்று அவரை கவுரவித்தது. இதில் சர்ச்சை என்னவென்றால் அவர் ஜெர்மனி நாஜி படையில் இருந்தவர். பல லட்சம் யூசர்களை நாஜிக்கள் எப்படிக் கொன்று குவித்தனர் என்பதை உலகம் அறியும். இதனால் உலகெங்கும் உள்ள யூதர்கள் கனடாவை மிகக் கடுமையாகச் சாடினர்.
சர்ச்சை: கடந்த வெள்ளிக்கிழமை யாரோஸ்லாவ் ஹன்கா என்பவரைக் கனடா சபாநாயகர் அந்தோனி ரோட்டா கவுரவித்தார். 98 வயதான ஹன்கா, போலந்து நாட்டைச் சேர்ந்த உக்ரைனியர் அவர். இவர் இரண்டாம் உலகப் போரின்போது ஹிட்லரின் வாஃபென் எஸ்எஸ் பிரிவுகளில் ஒன்றில் பணியாற்றினார். அதன் பின்னர் இவர் கனடாவில் குடிபுகுந்தார். உக்ரைன் அதிபர் நிகழ்ச்சியைப் பார்க்க வந்த இவரை திடீரென கனடா சபாநாயகர் அந்தோனி ரோட்டா அழைத்துக் கவுரவித்ததே சர்ச்சைக்குக் காரணம்.
அவரது பின்னணி குறித்துத் தெரியாது என்றும் அவரை கவுரவித்தது தனது தனிப்பட்ட முடிவு என்று கூறி கனடா நாடாளுமன்ற சபாநாயகர் அந்தோனி ரோட்டா இந்த விவகாரத்தில் ஏற்கனவே மன்னிப்பு கேட்டுள்ளார். இதற்கிடையே இப்போது அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும் மன்னிப்பு கேட்டுள்ளார்.
மன்னிப்பு: இது குறித்து அந்நாட்டு நாடாளுமன்றத்தில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பேசுகையில், "இந்தச் சபையில் உள்ள அனைவர் சார்பாக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். கடந்த வெள்ளிக்கிழமை நடந்த சம்பவத்திற்காக உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி மற்றும் உக்ரைன் தூதர்கள் ஆகியோரிடமும் இது குறித்து மன்னிப்புக் கேட்டுக் கொள்ள விரும்புகிறேன்.
ஒருவரின் பின்னணி குறித்துத் தெரியாமல் அவரை கவுரவித்தது பயங்கரமான தவறு.. இது நாஜி ஆட்சியின் கடுமையாகப் பாதிக்கப்பட்டோருக்கு எவ்வளவு பெரிய வலியைக் கொடுத்திருக்கும் என்பதை உணர முடிகிறது. இதற்காக நான் பகிரங்கமாக அனைவரிடமும் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்" என்று அவர் தெரிவித்தார்.
உள்ளே வரும் ரஷ்யா: இதில் பலரும் ரஷ்யாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். குறிப்பாக இந்த விவகாரத்தைக் கையில் எடுத்துள்ள ரஷ்யா, உக்ரைன் எதற்குப் போராடுகிறது என்பது உலக நாடுகளுக்கு வெளிச்சத்திற்கு வந்துள்ளதாகச் சாடியுள்ளது. மேலும், இந்த விவகாரம் குறித்து கனடா அதிகாரப்பூர்வமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தியது.
இது குறித்துப் பேசிய ட்ரூடோ, "இது தெரியாமல் நடந்த தவறு. இதை வைத்து சிலர் உக்ரைன் நாஜிக்களுக்கு ஆதரவு அளிப்பதாகச் சொல்வது எதற்காகப் போராடுகிறது மோசமான செயல். இந்த தவறை அரசியலாக்க நினைப்பது மிகவும் கவலை அளிக்கிறது. சபாநாயகரின் தன்னிச்சையாக அவரை அழைத்துப் பாராட்டினார். இந்த செயலுக்குக் கனடா அரசு காரணமில்லை" என்றும் அவர் தெரிவித்தார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications