நீங்கள் டீச்சரா? கனடா உங்களை வரவேற்க தயார்.. யாருக்கெல்லாம் ஆஃபர் இருக்குன்னு பாருங்க
ஒட்டாவா: வெளிநாடுகளிலிருந்து கனடாவுக்கு வருபவர்களில் சிலருக்கு மட்டுமே அந்நாடு முக்கியத்துவம் கொடுக்கிறது. அந்த வகையில் இந்த ஆண்டு ஆசிரியர்கள் உள்ளிட்டோரை வரவேற்க தயாராக இருப்பதாக தெரிவித்திருக்கிறது.
கனடாவின் தேவைக்கு ஏற்ப பல்வேறு துறைகளில் பணியாற்ற வெளிநாட்டினர் வரவேற்கப்படுகின்றனர். இதற்கான திருத்தப்பட்ட பட்டியலை தற்போது அந்நாடு வெளியிட்டிருக்கிறது.

அதன்படி இந்த ஆண்டு, ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கான உதவியாளர்கள், ஆரம்பகால குழந்தைப் பருவக் கல்வியாளர்கள், சமையல்காரர் ஆகியோருக்கு டிமான்ட் அதிகமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. முன்னர் டிரைவர்களுக்கு அதிக டிமான்ட் இருந்தது. ஆனால் இந்த சூழல் தற்போது மாறியிருக்கிறது. தவிர அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் (STEM - Science, Technology, Engineering, Mathematics) துறையில் அனுபவம் பெற்றவர்களையும், தொழில்துறை (Trades), விவசாயம், பிரஞ்சு மொழி திறமை கொண்டவர்களையும் கனடா வரவேற்க தயாராக இருக்கிறது.
குறிப்பாக ஆசிரியர்களை பொறுத்த அளவில், மழலையர் பள்ளி, தொடக்க மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு அதிக டிமான்ட் இருக்கிறது. மறுபுறும் கட்டிடக் கலைஞர்கள், கணினி மற்றும் தகவல் அமைப்புகள் மேலாளர்கள், மென்பொருள் பொறியாளர்கள், டெவலப்பர்கள் மற்றும் தரவு விஞ்ஞானிகள் (data scientists) உள்ளிட்ட துறைகளுக்கு பெரிய அளவில் ஆட்கள் தேவைப்படுவதில்லை. அவர்களுக்கு பதிலாக காப்பீட்டு முகவர்கள் மற்றும் தரகர்கள் புதியதாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஒரு காலத்தில் கனடாவுக்கு டிரைவர்களின் தேவை அதிகமாக இருந்தது. ஆனால் இன்றைய தேதியில் நீங்கள் பைலட்டாக இருந்தாலும் கூட கனடாவில் வேலை கிடைப்பது கஷ்டம் என்கிற சூழல் உருவாகியுள்ளது. வளர்ந்து வரும் தேவைகளை கருத்தில் கொண்டு முன்னுரிமைகளுக்கான மாற்றங்கள் அறிவிக்கப்படும் என்று சொல்லப்படுகிறது.
மறுபுறம் அமெரிக்காவின் விசா நெருக்கடி, கனடா பக்கம் நோக்கி புலம் பெயர் தொழிலாளர்களை தங்கியுள்ளது. வடமாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டில் வந்து மக்கள் வேலை பார்க்கிறார்களே, அதுபோல இங்கிருந்து இந்தியர்கள் கனடாவுக்கு சென்று வேலை செய்கிறார்கள். கனடா வளர்ந்த நாடாக இருந்தாலும், அதை அப்படியே மெயின்டெயின் செய்வதற்கு கனடாவில் ஆட்கள் பலம் கிடையாது. மட்டுமல்லாது வளர்ந்து வரும் விலைவாசி காரணமாக கனடா மக்கள் நியாயமான ஊதியத்தை கேட்கிறார்கள்.
ஆனால் மற்ற நாடுகளிலிருந்து புலம் பெயர்ந்து வரும் தொழிலாளர்கள் குறைந்த ஊதியத்திற்கு வேலை செய்ய தயாராக இருக்கிறார்கள். எனவே கனடாவின் தனியார் முதலாளிகள் புலம் பெயர் தொழிலாளர்களை பெரிதும் நம்பியிருக்கிறார்கள். நீங்கள் கனடாவுக்கு போக திட்டமிட்டிருக்கிறீர்கள் எனில், இந்த ஆண்டுக்கான டிமான்ட் எந்தெந்த துறைகளில் அதிகம் இருக்கிறது என்பதை தெரிந்துக்கொண்டு செல்வது சரியாக இருக்கும்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications