நடுவானில் விமான இறக்கையில் நின்று பாடிய கனடா பாடகர்.. கால் தவறி விழுந்து பலியான பரிதாபம்!
கனடாவை சேர்ந்த பாடகர் ஒருவர் விமானத்தில் சாகசம் செய்து பாட முயற்சித்த போது கீழே விழுந்து பலியாகி உள்ளார்.
Recommended Video

ஓட்டவா: கனடாவை சேர்ந்த பாடகர் ஒருவர் விமானத்தில் சாகசம் செய்து பாட முயற்சித்த போது கீழே விழுந்து பலியாகி உள்ளார்.
இப்போதெல்லாம் சமூக வலைத்தளங்களில் பிரபலம் ஆக நிறைய பேர் வித்தியாசமான சாகசங்களை செய்கிறார்கள். தங்கள் யூ டியூப், இன்ஸ்டா பக்கங்களை பிரபலபடுத்த இவர்கள் செய்யாத காரியங்கள் கிடையாது.
பலர் தங்கள் உயிரை பணயம் வைத்து சாதனை செய்து பிரபலம் அடைகிறார்கள். அந்த வகையில் கனடாவின் பிரபல பாடகர் ஜோன் ஜேம்ஸ் சாதனை ஒன்றை செய்ய நினைத்து பரிதாபமாக பலியாகி உள்ளார்.

மிகவும் பிரபலம்
கனடாவை சேர்ந்தவர் ஜோன் ஜேம்ஸ். இப்போது இவர் அமெரிக்காவில் வசித்து வருகிறார். இவர் பாடகர் மட்டுமில்லாமல் சில சிறிய சினிமாக்களை இயக்கியும் நடித்தும் இருக்கிறார். விமானத்தில் இருந்து பாராசூட் மூலம் குதித்து பல வித்தியாசமான சாதனைகளை செய்து இருக்கிறார்.

என்ன செய்தார் தெரியுமா
இந்த நிலையில் இவர் பாடிக்கொண்டே விமானம் மூலம் சாகசம் செய்ய முடிவெடுத்து உள்ளார். அதன்படி விமானத்தின் இறக்கையில் ஏறி நின்று, விமானம் பறந்த பின் இறக்கையிலேயே நின்று கொண்டு பாட்டு பாட முடிவெடுத்துள்ளார். இதற்காக கடந்த சில நாட்களாக மிக சரியாக பயிற்சியும் செய்துள்ளார்.

தவறி விழுந்தார்
இந்த நிலையில் இன்று 5000 மீட்டருக்கும் அதிகமான உயரத்தில் அந்த சிறிய விமானம் பறந்து இருக்கிறது. அப்போது இவர் இறக்கையில் ஏறி பாட்டு பாட சென்றுள்ளார். ஆனால் இறக்கையின் நுனிக்கு சென்றதால் இவர் நிலைதடுமாறி உள்ளார். அந்த நேரம் பார்த்து விமானமும் லேசாக கவிழ்ந்துள்ளது. இந்த நிலையில் விமானி சுதாரிக்கும் முன் இவர் கீழே விழுந்தார்.

இறந்தார்
பாராசூட் கட்டியிருந்தவர், அதை விரிக்கும் முன் பூமியை அடைந்தார். அதிவேகமாக கீழே விழுந்தவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த சம்பவம் கனடா மக்களையும், அவரது ரசிகர்களையும் பெரிய அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications