ட்ரூடோ சொன்னது பொய்தானா? காலிஸ்தானி கொலையில்.. இந்தியாவுக்கு தொடர்பில்லை! கனடா ஆணையம் ரிப்போரட்
டொரண்டோ: கனடாவில் கடந்த 2023ம் ஆண்டு கொல்லப்பட்ட காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜர் கொலையில் இந்தியாவுக்குத் தொடர்பு இருப்பதாக கனட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சில பகீர் குற்றச்சாட்டுகளைச் சுமத்தியிருந்தார். இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், நிஜ்ஜர் கொலையில் வெளிநாடுகளின் தொடர்பு இருப்பது போலத் தெரியவில்லை என்று அந்நாட்டு ஆணையமே இப்போது அறிக்கை சமர்ப்பித்துள்ளது.
இந்தியர்கள் அதிகம் வசிக்கும் நாடுகளில் ஒன்று கனடா. குறிப்பாக அங்குப் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் அதிகளவில் வசித்து வருகிறார்கள். அதேநேரம் அங்கு காலிஸ்தான் பயங்கரவாதிகளும் வெளிப்படையாகவே செயல்பட்டு வருகிறார்கள்.

காலிஸ்தான் பயங்கரவாதிகள்:
நமது நாட்டில் காலிஸ்தான் பயங்கரவாதி இயக்கங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளன. ஆனால், கனடாவில் காலிஸ்தான் பயங்கரவாதிகளுக்குத் தடை இல்லை.. இதனால் காலிஸ்தான் பயங்கரவாதிகள் சுயமாக இயங்கி வருகிறார்கள். அவர்கள் அங்கு வசிக்கும் இந்தியர்களை மூளைச்சலவை செய்து தவறான பாதைக்கு அழைத்துச் செல்வதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
ஜஸ்டின் ட்ரூடோ:
இதற்கிடையே கடந்த ஜூன் 2023ம் ஆண்டு கனடாவில் வசித்து வந்த ஹர்தீப் சிங் நிஜ்ஜர் என்பவர் சுட்டுக்கொல்லப்பட்டார். காலிஸ்தான் பயங்கரவாதியாக அறியப்படும் ஹர்தீப் சிங் நிஜ்ஜர் இந்தியாவில் பல குற்ற செயல்களுக்குக் காரணமானவர் என்று அறியப்படுகிறார். ஹர்தீப் சிங் கனடாவில் குடியுரிமை பெற்ற நபர் ஆவார். இதற்கிடையே நிஜ்ஜர் கொலைக்கும் இந்திய ஏஜெண்டுகளுக்கு தொடர்பு இருப்பதாக சில மாதங்களுக்கு முன்பு அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றஞ்சாட்டினார். இது குறித்து நம்பகமான தகவல்கள் தன்னிடம் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
இருப்பினும், இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்த இந்தியா, ஆதாரங்களை வெளியிடுமாறு வலியுறுத்தியது. ஆனால், ஆதாரங்களை வெளியிட மறுத்த ட்ரூடோ, தொடர்ந்து இந்தியா மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை மட்டும் சுமத்தி வந்தார். இதனால் இரு நாட்டு உறவுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. இரு நாடுகளும் தங்கள் தூதர்களையும் கூட திரும்பப்பெற்றுக்கொண்டன. இது ஒரு பக்கம் இருக்க நிஜ்ஜர் கொலை தொடர்பாக விசாரிக்கக் கனடா நாட்டின் அரசே ஆணையம் ஒன்றை அமைத்திருந்தது.
தொடர்பு இல்லை:
அந்த ஆணையத்தின் அறிக்கை குறித்த தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளன. அதில் ஹர்தீப் சிங் நிஜ்ஜர் கொலையில் வெளிநாட்டு அரசுகளுக்குத் தொடர்பு இருப்பது போல இருப்பதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்று கூறப்பட்டுள்ளது. 'Public Inquiry Into Foreign Interference in Federal Electoral Processes and Democratic Institutions' என்ற தலைப்பில் 123 பக்கங்களைக் கொண்ட இந்த அறிக்கையில் பல்வேறு தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
அறிக்கை சொல்வது என்ன:
அந்த அறிக்கையில் ஒரு இடத்தில் ஹர்தீப் சிங் நிஜ்ஜர் கொல்லப்பட்டது குறித்து இந்தியா தவறான தகவலைப் பரப்பியதாகக் கூறப்பட்டுள்ளது. அதேநேரம் அந்த கொலையில் ஒரு வெளிநாட்டுச் சக்திக்கு உள்ள தொடர்பைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறியுள்ளது. அந்த ரிப்போட்டில், "ஹர்தீப் சிங் நிஜ்ஜர் கொலையில் இந்தியாவின் தொடர்பு இருப்பதாக (இது தொடர்பான உறுதியான ஆதாரங்கள் இல்லை) பிரதமர் [ஜஸ்டின் ட்ரூடோ] கூறியதைத் தொடர்ந்து சிலர் நாட்டில் திட்டமிட்டு தவறான தகவல்கள் பரப்பினர். இது குறித்து விசாரிக்கப்பட வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications