சோமாலியா தலைநகரில் கார் குண்டு வெடிப்பு: 11 பேர் பலி; 16 பேர் படுகாயம்
சோமாலியா நாட்டின் தலைநகரில் இன்று நிகழ்ந்த கார் குண்டுவெடிப்பில் 11 பேர் உயிரிழந்தனர்
மொகடிஷூ: சோமாலியா நாட்டின் தலைநகர் மொகடிஷூவின் இன்று சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. இதில் 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 16 பேர் படுகாயமடைந்தனர்.
மொகடிஷூவின் வபேரி மாவட்டத்தில் உள்ள காய்கறி மார்க்கெட்டின் அருகே இன்று சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. காருக்குள் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்துச் சிதறியதில் அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் நாலாபுறமும் தூக்கி வீசப்பட்டனர். பலர் உடல் உறுப்புகள் சிதைந்த நிலையில் ரத்தவெள்ளத்தில் துடித்தனர்.

இதில் 11 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். மேலும் 16 பேர் பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் உயிருக்குப் போராடுவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை. தலைநகரில் இதுபோன்ற தாக்குதலை தொடர்ந்து நடத்தி வரும் அல் ஷபாப் அமைப்பு, இந்த தாக்குதலையும் நடத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
சோமாலியாவில் மேற்கத்திய நாடுகளின் ஆதரவுடன் நடைபெற்று வரும் ஆட்சியை கலைக்க வேண்டும் என்பதற்காகவே இதுபோன்ற தாக்குதலில் அல்-ஷபாப் அமைப்பையினர் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications