வெடித்துக் கிளம்பிய தோட்டா... மறக்க முடியாத காஸ்ட்ரோ
கியூபாவின் புரட்சித் தலைவன் பிடல் காஸ்ட்ரோ மறைந்து விட்டார். அவரது தலைமையில் வெடித்துக் கிளம்பிய கியூப புரட்சியை வரலாறு மறக்க முடியாது.
ஹவானா: ஹவானா நகர சாலைகளில் வீறு கொண்டெழுந்த புரட்சி தீபங்கள்... வெம்மையின் தகிப்பு தாங்க முடியாமல் சிதறி ஓடிய சர்வாதிகாரம்... புரட்சித் தலைவன் காஸ்ட்ரோவை மறக்க முடியுமா?
1959ல் சர்வாதிகாரி புல்ஜெனிகோ பாடிஸ்டாவை துரத்தியடித்த அந்த நாள்.. கியூப மக்களின் விடியலாகும். ஹவானா தெருக்களில் ஆயிரமாயிரம் மக்களுடன் புரட்சி நாயகனாக காஸ்ட்ரோ சீறிப் பாய்ந்த அந்த நாட்களை வரலாறு மறக்குமா?
அழுக்குப் படிந்த உடைகளுடன், முகம் மற்றும் மனசு முழுவதும் நிரம்பி வழிந்த நம்பிக்கையுடன், தீரத்துடன் சர்வாதிகாரத்திற்கு எதிராக பொங்கி எழுந்த மக்கள் கடலுக்கு மத்தியில் காஸ்ட்ரோ புயலென பாய்ந்து வந்த அந்த தருணத்தை கியூப மக்கள் என்றென்றும் மறக்க முடியாது.

கியூப நாயகன்
32 வயதான, அடர்ந்த தாடியுடன் கூடிய காஸ்ட்ரோவின் அந்த புரட்சி வேட்டை, பாடிஸ்டாவை பதவியிலிருந்தும், அதிகாரத்திலிருந்தும் துரத்தியடித்தது. கியூபா, மக்கள் வசம் வந்தது. அந்த புரட்சிக்கு வித்திட்ட நாயகன் இன்று அந்த மக்களை விட்டு மறைந்து விட்டார்.

வரலாற்றின் வீரக் களம் கியூபா
காஸ்ட்ரோ தலைமையில் ஒட்டுமொத்த நாடே திரண்டெழுந்து போராடிய அந்தப் போர்க்களம் வரலாற்றின் முக்கிய வீரக் களமாக என்றென்றும் நிலைத்திருக்கும். அடக்குமுறைக்கு எதிராக திரண்டெழுந்து சர்வாதிகாரத்தை விரட்டியடித்து மக்களின் ஆட்சியை நிலை நாட்டி கியூப மக்களுக்கு புத்துயிர் கொடுத்தவர் காஸ்ட்ரோ.

அமெரிக்க அடக்குமுறைகள்
47 ஆண்டுகள் காஸ்ட்ரோவின் கரத்தில் கியூபா தவழ்ந்தபோது, எத்தனையோ சிக்கல்கள், சிரமங்கள், சவால்கள், போராட்டங்கள், அமெரிக்க அடக்குமுறைகள்... ஆனாலும் கியூப மக்களை தலைநிமிர்ந்து வாழ வைத்தவர் காஸ்ட்ரோ. 2006ம் ஆண்டு ஜூலை மாதம் தனது உடல் நிலை காரணமாக அதிகாரத்திலிருந்து இறங்கினார் காஸ்ட்ரோ. 2008ம் ஆண்டு நிரந்தரமாக ஆட்சி அதிகாரத்தை விட்டு ஒதுங்கியிருந்தார்.

11 ஜனாதிபதிகளைப் பார்த்தவர்
தனது காலத்தில் 11 அமெரிக்க ஜனாதிபதிகளைப் பார்த்தவர் காஸ்ட்ரோ. இதில் பராக் ஒபாமாவைத் தவிர மற்ற ஜனாதிபதிகளிடம் அவர் அடக்குமுறை மற்றும் சவால்களை மட்டுமே கண்டவர். ஜான் எப் கென்னடி, ரிச்சர்ட் நிக்ஸன், ரொனால்ட் ரீகன் ஆகியோர் இதில் முக்கியமானவர்கள்.

கண்ணில் விரலை விட்டு ஆட்டியவர்
அமெரிக்காவிலிந்து 100 மைல்களுக்கும் குறைவான தொலைவில்தான் கியூபா உள்ளது. ஆனால் அமெரிக்காவை சற்றும் அண்டாமல் சொந்தக் காலில் நின்று அதன் கண்ணில் விரலை விட்டு ஆட்டியது கியூபா. காரணம் காஸ்ட்ரோவின் துணிச்சல் மிக்க, புத்தி சாதுரியமிக்க தலைமை.

கை கொடுத்த சோவியத்
1960ம் ஆண்டு கியூபாவுக்கும், சோவியத் யூனியனுக்கும் இடையே தூதரக ரீதியிலான உறவு ஏற்பட்டது. இதனால் அமெரிக்காவின் வெறுப்பும், கோபமும் அதிகரிக்கவே செய்ததே. ஆனாலும் காஸ்ட்ரோ கவலைப்படவில்லை. அமெரிக்கா அடுத்தடுத்து தடைகளை விதித்தபோதும் அவர் அஞ்சலவில்லை, சலனப்படவில்லை.

அன்பும் அரவணைப்பும்
சோவியத் யூனியனின் உதவியால் கியூபா தொடர்ந்து பொலிவுடன் நடை போட்டது. அமெரிக்காவிடமிருந்து கிடைக்காமல் போன அரவணைப்பு அவருக்கு சோவியத் யூனியனிடமிருந்து கிடைத்தது. 1962ல் கியூபாவுக்கு எதிரான வர்த்தகத் தடையை அமெரிக்கா அமல்படுத்தியது. ஆனால் அதன் பாதிப்புகளால் கியூபா துவண்டு விடாமல் பார்த்துக் கொள்வதற்காகப் போராடினார் காஸ்ட்ரோ. அவரது விடா முயற்சியால் அந்தத் தடையின் பாதிப்பிலிருந்து கியூபா பெருமளவு மீண்டது. கடைசி வரை கியூபாவுக்காக போராடியவர் காஸ்ட்ரோ என்பது முக்கியமானது.

50 ஆண்டு கால எரிச்சல்
கிட்டத்தட்ட 50 ஆண்டு காலம் அவர் அமெரிக்காவை ஆட்டிப் படைத்தார். அவரை எதுவுமே செய்ய முடியாமல் விக்கித்து நின்றதுதான் அமெரிக்கா கண்ட பலன். அவரைக் கொல்ல எத்தனை முயற்சிகள்.. எதுவுமே காஸ்ட்ரோவின் நிழலைக் கூடத் தொட முடியவில்லை.

முடிஞ்சா கொன்று பார்
தன்னைக் கொல்ல நடந்த சதிகளை பலமுறை சிலாகிப்புடன் வெளியுலகுக்குச் சொல்லி அமெரிக்காவுக்கு மேலும் மேலும் எரிச்சலைக் கூட்டியவர் காஸ்ட்ரோ. உலக வரலாற்றில் யாரையுமே இத்தனை முறை கொல்ல முயற்சி நடந்திருக்காது. அந்த சாதனைக்கும் சொந்தக்காரர் காஸ்ட்ரோ. அவர் விரும்பிப் பிடிக்கும் சுருட்டில் கூட குண்டு வைத்துப் பார்த்தது அமெரிக்கா. ஆனால் அதுவும் பலிக்காமல் போனதுதான் அமெரிக்காவுக்குக் கிடைத்த உச்சகட்ட அவமானமாகும்.

போராளிகளுக்கு மரணமில்லை
நான் மரணத்தைக் கண்டு ஒரு போதும் அஞ்சியதில்லை... மரணத்தைக் கண்டு ஒரு போதும் கவலைப்பட்டதும் இல்லை.. இது 2002ம் ஆண்டு காஸ்ட்ரோ கூறிய வார்த்தை. போராளிகளை அச்சுறுத்த முடியாது, பணிய வைக்க முடியாது, மிரட்ட முடியாது.. ஏன் ஏமாற்றவும் முடியாது.. இதற்கு நம் காலத்தில் வாழ்ந்த மிகச் சிறந்த உதாரணம் பிடல் காஸ்ட்ரோ.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications