ரஷ்யாவின் அடுக்குமாடிக் குடியிருப்பில் சிலிண்டர் வெடித்து தீவிபத்து - 5 பேர் பரிதாப பலி; தேடுதல் தீவ
மாஸ்கோ: ரஷ்யாவில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் எரிவாயு கேஸ் சிலிண்டர் வெடித்து சிதறியதில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ரஷ்யாவின் தென்பகுதியில் உள்ள வோல்கோகிராட் நகரில் உள்ள 9 மாடிகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று திடீரென கேஸ் சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.
இதனால், கண்ணிமைக்கும் நேரத்தில் பரவிய தீயால் அந்த இடமே புகைமண்டலமானது. சிறிது நேரத்தில் கட்டிடத்தின் சில பகுதிகள் இடிந்து விழுந்தன.

வெளியேற முடியாமல் தவிப்பு:
அங்கிருந்த வீடுகளில் வசித்த பலர் வெளியேற முடியாமல் உள்ளே சிக்கிக்கொண்டனர். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
போராடி அணைக்கப்பட்ட தீ:
அவர்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்து, மக்களை பாதுகாப்பாக மீட்டனர். இருப்பினும், இந்த விபத்தில் சிக்கிய 5 பேர் உயிரிழந்தனர். காயமடைந்த 10 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
பலி எண்ணிக்கை உயரலாம்:
கட்டிடத்தின் அடிப்பகுதியில் ஏற்பட்டுள்ள இடிபாடுகளுக்குள் பத்துக்கும் மேற்பட்டோர் சிக்கியிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.
குறைந்த பாதுகாப்பு:
ரஷ்யாவில் குடியிருப்பு கட்டிடங்கள் மிகவும் பழமையானதாக இருப்பதும், பாதுகாப்பு நடவடிக்கைகளில் அலட்சியம் காட்டப்படுவதுமே இதுபோன்ற விபத்துக்கு காரணமாகிறது என கூறப்படுகிறது. சமீபத்தில் ரஷியாவில் மனநோய் காப்பகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 23 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications