என்னை எப்படி உன் பூனை கடிக்கலாம்: காதலனை கடித்துக் குதறிய இளம்பெண்
பெர்லின்: ஜெர்மனியில் தன்னை பூனை கடித்த கோபத்தில் அதன் உரிமையாளரான தனது காதலரை 26 வயது பெண் ஒருவர் அடித்து, கடித்துக் குதறியுள்ளார்.
ஜெர்மனி நாட்டில் உள்ள ஹேகன் நகரைச் சேர்ந்த 26 வயது லாரா(பெயர் மாற்றப்பட்டுள்ளது) 39 வயது கெவினை(பெயர் மாற்றப்பட்டுள்ளது)காதலித்து வருகிறார். லாராவும், கெவினும் ஒரே வீட்டில் வசித்து வருகிறார்கள். கெவின் பூனை ஒன்றை வளர்த்து வருகிறார். அந்த பூனை நேற்று காலை லாராவை கடித்துவிட்டது.

இதனால் ஆத்திரம் அடைந்த லாரா பூனையை அடக்க முயன்றும் முடியவில்லை. இதையடுத்து பூனை தொடர்பாக லாரா மற்றும் கெவின் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றி லாரா கெவினை கண்டபடி அடித்ததுடன் கடித்துக் குதறியுள்ளார்.
இதையடுத்து கெவின் போலீசாருக்கு போன் செய்ய முயன்றார். லாராவோ அவரது செல்போனை பறித்துக் கொண்டார். ஒரு வழியாக லாராவின் பிடியில் இருந்து தப்பித்த கெவின் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
போலீசார் வந்து கெவினை மருத்துவமனையில் அனுமதித்தனர். கெவினை கடித்த லாராவை அழைத்துச் சென்று அறிவரை வழங்கினர். லாரா 10 நாட்கள் அந்த வீட்டுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications