மம்மி வண்டு, மம்மி பூனை, மம்மி தேனீ.. எகிப்த் பிரமிடுகளில் கிடைத்த புதுவகை மம்மிகள்!
மம்மி வண்டு, மம்மி பூனை, மம்மி தேனீ.. எகிப்த் பிரமிடுகளில் கிடைத்த புதுவகை மம்மிகள்!
கைரோ: எகிப்தில் உள்ள பிரமிடுகளில் புதுவகை மம்மிகள் கிடைத்து இருக்கிறது. அங்கு மம்மியாக மாற்றப்பட்ட வண்டுகள் கூட கிடைத்துள்ளது.
எகிப்து நாட்டில் நிறைய பிரமிடுகள் உள்ளது. இதில் பழைய பிரமிடுகள் சில சிதிலமடைந்து பெரிய கவனம் பெறாமல் உள்ளது. அந்த வகையில் கவனிக்கப்படாமல் இருந்த பிரமிட் ஆப் உசர்காப் தற்போது ஆராய்ச்சி செய்யப்பட்டு வருகிறது.
இதில் கடந்த 7 மாதங்களாக ஆராய்ச்சி நடந்து வருகிறது. இந்த நிலையில் இதில் பல வித்தியாசமான மம்மிகள் கிடைத்து இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தேனீக்கள் இருந்தது
அதன்படி பிரமிட் ஆப் உசர்காப் உள்ளே, மம்மியாக மாற்றப்பட்ட வண்டுகள் கூட கிடைத்துள்ளது. அதாவது 2500 வருடம் பழமையான வண்டுகளை மம்மிகளாக மாற்றி உள்ளே பாதுகாத்து வைத்து இருக்கிறார்கள். இத்தனை வருடம் இந்த வண்டுகளின் உடல் எதுவும் ஆகாமல் அப்படியே இருந்துள்ளதும் ஆராய்ச்சியாளர்களுக்கு பெரிய ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

பூனைகள் இருந்தது
இதுமட்டுமில்லாமல் அங்கு தேன் கூடும், கொஞ்சம் தேனீக்களும் மம்மிகளாக மாற்றி வைக்கப்பட்டு இருக்கிறது. 11 பூனைகள் மம்மிகளாக அங்கு கிடைத்துள்ளது. இந்த பூனைகள் மனித மம்மிகளுக்கு அருகிலேயே வைக்கப்பட்டு இருந்ததுதான் அதிசயம்.

ஏன் என்று குழப்பம்
ஆனால் மனிதர்களை இப்படிய மம்மிகளாக மாற்றியது கூட பிரச்சனை இல்லை, ஏன் பூச்சிகள், விலங்குகளை எல்லாம் மம்மிகளாக மாற்றினார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. முதல்முறை இப்படிப்பட்ட மம்மிகளை கண்டுபிடித்து இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் திகைப்புடன் தெரிவிக்கிறார்கள்.

வேறு என்ன இருந்தது
இது இல்லாமல் மனித மம்மிகள் 7 புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதேபோல் அங்கு சீலிடப்பட்ட அறை ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதை இந்த வாரம் திறந்த பின் புதிய கண்டுபிடிப்புகள் நிகழத்தப்படலாம் என்று கூறுகிறார்கள்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications