பூனை வாயில் என்னன்னு பாருங்க.. இதுதாங்க தாய்மை.. மனிதத்தை நிமிர வைத்த காட்சி.. வைரலாகும் வீடியோ
நலிவுற்ற குட்டியை வாயில் கவ்வி ஆஸ்பத்திரி வந்தது ஒரு பூனை
இஸ்தான்புல்: உடம்பு சரியில்லாத தன் குட்டியை வாயில் கவ்விக் கொண்டு ஆஸ்பத்திரிக்குள் வந்துவிட்டது ஒரு பூனை.. இந்த வீடியோ உலகம் முழுவதும் பெரும் வைரலாகி அனைவரையும் நெகிழ வைத்து வருகிறது.
துருக்கி நாட்டில் உள்ள இஸ்தான்புல் நகரத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.. உலகில் எல்லா நாடுகளுமே கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளன.
ஆஸ்பத்திரிகள் எல்லாம் நோயாளிகளால் நிறைந்து வழிந்து கொண்டிருக்கின்றன. அநத் வகையில் துருக்கியிலும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

எமர்ஜென்ஸி
இந்நிலையில், அங்குள்ள ஆஸ்பத்திரி ஒன்றிற்கு திடீரென ஒரு பூனை ஓடி வந்தது.. வாயில் அதன் குட்டியை கவ்விக் கொண்டு நேராக எமர்ஜென்ஸி வார்டுக்கு வந்தது.. இதை பார்த்ததும் அங்கிருந்த இருந்த டாக்டர்களுக்கு ஆச்சரியமாக போய்விட்டது.. அதனால், அந்த பூனையின் குட்டிக்கு உடம்பு சரியில்லை என்று மட்டும் புரிந்துகொண்டனர்.

பாதுகாப்பு
எனவே, பூனையின் வாயில் இருந்து குட்டியை பெற முயன்றனர்.. ஆனால் அந்த தாய்பூனை கெட்டியாக கவ்விக் கொண்டு குட்டியை தன் பிடியில் இருந்து விடவே இல்லை.. கீழேவும் விடவில்லை.. பிறகு டாக்டர்கள் 2 பூனைகளையுமே பாதுகாப்பாக அரவணைத்தனர்.. பூனைக்கும், குட்டிக்கும் முதலில் பால் தந்தனர்.- பிறகு சாப்பாடு தந்தனர்.. அதற்கு பிறகுதான் கால்நடை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போட்டோக்கள்
ஆனால் அந்த பூனைகளுடன் நிறைய போட்டோக்கள், வீடியோக்களை எடுத்து கொண்டனர்.. இதை மெர்வ் ஆஸ்கான் என்பவர் தன்னுடைய ட்விட்டரில் ஷேர் செய்துள்ளார்.. அதில், "இன்று நாங்கள் ஆஸ்பத்திரியின் எமெர்ஜென்ஸி வார்டில் இருந்தோம்... ஒரு பூனை தனது குட்டியை வாயில் கவ்விக் கொண்டு அந்த ரூமுக்குள் வந்தது" என்று தெரிவித்துள்ளார். இப்போது அந்த பூனைக்குட்டிக்கு சிகிச்சை தரப்பட்டு வருகிறதாம்.. இந்த போட்டோக்களை இதுவரை 82,000-க்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளனர்.. ஆயிரக்கணக்கில் இந்த வீடியோ ஷேர் ஆகியும் வருகிறது.

மனித நேயம்
ரோட்டில் அனாதையாக விழுந்து மனிதர்கள் விழுந்து கிடந்தாலே ஒதுங்கி செல்லும் இந்த காலத்தில், தங்கள் உயிரை காப்பாற்றிய மருத்துவர்களின் சடலங்களை இரக்கமே இல்லாமல் வீசி எறியும் நிலையில்... இந்த பூனையின் பாசம் வியக்க வைத்து வருகிறது.. இப்படி ஒரு கரிசனமும், தாய்மையும் ஜீவராசிகளிடம் வழிந்து வருவதை என்னவென்று சொல்வது.. தாய்மையின் முன் எது நின்றாலும் அது தூள் தூளாக காணாமல்தான் போகும்... "அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்?!"
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications