ரொம்ப செக்ஸியா இருக்கு யூனிபார்ம்... கத்தே பசிபிக் விமான பணிப்பெண்கள் அதிருப்தி!
ஹாங்காங்: கத்தே பசிபிக் விமான நிறுவனம் தனது ஏர் ஹோஸ்டஸ்களுக்கு கொடுத்துள்ள சீருடைக்கு எதிர்ப்பு வலுக்கிறது. இது மிகவும் செக்ஸியாக இருப்பதாகவும், உடல் அங்கங்களை வெளிக்காட்டும் வகையில் இருப்பதாகவும், இப்படிப்பட்ட உடையில் போனால், பாலியல் சீண்டல்களை அதிக அளவில் எதிர்கொள்ள நேரிடும் என்றும் அவர்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.
இந்த சீருடையை தாங்கள் விரும்பவில்லை என்றும் கத்தே பசிபிக் ஏர் ஹோஸ்டஸ்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
உடனடியாக இதை மாற்றியமைக்குமாறும் அது விமான நிறுவனத்தைக் கேட்டுக் கொண்டுள்ளதாம்.

அது டைட்.. இது ஷார்ட்
இதுகுறித்து ஏர் ஹோஸ்டஸ்கள் சிலர் கூறுகையில் தற்போது கொடுக்கப்பட்டுள்ள வெள்ளை நிற மேல்சட்டை மிகவும் சிறியதாக இருக்கிறது. அதேபோல சிவப்பு நிற ஸ்கர்ட்கள் உடம்பை இறுக்கிப் பிடித்தபடி உள்ளன. இதனால் சவுகரியமாக எங்களால் இருக்க முடியவில்லை.

பாலியல் சீண்டல்களைத் தாங்க முடியாது
இப்படிப்பட்ட டிரஸ்ஸில் எங்களால் வேகமாக திரும்பவோ, குனியவோ முடியாது. டிரஸ் கிழிந்து விடும் என்ற பயம உள்ளது. மேலும் உடம்பைப் பிடித்தபடி இருப்பதால் வக்கிரப் புத்தி படைத்த ஆண்களின் பாலியல் சீண்டல்களிலிருந்தும், பார்வையிலிருந்தும் தப்ப முடியாது என்று அவர்கள் கூறுகின்றனர்.

2011 முதல்
ஆனால் இந்த புதிய சீருடை 2011 முதலே இருந்து வருகிறது. அன்று முதலே புகார்களும் இருந்தபடிதான் உள்ளன. தற்போது அவை அதிகரித்துள்ளன.

இத மட்டும் செஞ்சுருங்க டெய்லர் சார்...
ஏர் ஹோஸ்டஸ்கள் மேலும் கூறுகையில் முழுமையாக டிரஸ்ஸை நாங்கள் மாற்ற் சொல்லவில்லை. மேல் சட்டையை நீளமாக்கி, ஸ்கர்ட்டுகளை லூசாக்கினால் போதும். இதைத்தான் கேட்கிறோம் என்றனர்.

12 மாதத்தில் 27 சதவீத பாலியல் சீண்டல்கள்
கடந்த 12 மாதத்தில் மட்டும் கத்தே பசிபிக் விமானப் பணிப் பெண்களிடம் 26 சவீத அளவுக்கு பாலியல் சீண்டல்கள் நடந்துள்ளதாக ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

தட்டிக் கொடுப்பது.. கிள்ளுவது
பின்பக்கம் தட்டிக் கொடுப்பது, கிள்ளுவது, முத்தமிடுவது, தொடுவது உள்ளிட்ட பாலியல் சீண்டல்களை இந்தப் பெண்கள் சந்திக்கிறார்களாம். சில பயணிகள் ஏ ஜோக் சொல்வார்களாம்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications