வெள்ளை புகை- கருப்பு புகை.. புது போப் தேர்வு செயல்முறை மே 7ல் தொடக்கம்! முடிவுகள் எப்போது தெரியும்?
வாடிகன்: கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவராக இருந்த போப் பிரான்சிஸ் கடந்த வாரம் காலமானார். அவரது உடலுக்குச் சனிக்கிழமை இறுதிச் சடங்குகள் நடந்த நிலையில், புதிய போப்பை தேர்வு செய்யும் செயல்முறை தொடங்கியுள்ளது. வரும் மே 7ம் தேதி புதிய போப்பை தேர்வு செய்ய கார்டினல்கள் ஒன்றுகூட உள்ளனர்.
கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக இருந்த போப் பிரான்சிஸ் வயது மூப்பு காரணமாகக் கடந்த வாரம் உயிரிழந்தார். ஈஸ்டர் தினத்தன்று வீல்சேரில் வந்து மக்களைச் சந்தித்த அவர், அதற்கு மறுநாளே காலமானார். அவரது இறுதிச் சடங்குகள் கடந்த சனிக்கிழமை எளிமையாக நடைபெற்றது. இதற்கிடையே போப் பிரான்சிஸுக்கு பிறகு அந்தப் பதவிக்கு யார் வருவார்கள் என்பதைத் தேர்வு செய்யும் நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன.

மே 7ல் தொடக்கம்
பொதுவாகப் புதிய போப்பை தேர்வு செய்ய கார்டினல்கள் அனைவரும் வாடிகன் நகரில் ஒன்று கூடுவார்கள். அதன் பிறகு விவாதம் நடந்து, ரகசிய வாக்கெடுப்பு மூலம் போப் தேர்வு செய்யப்படுவார். இந்த மாநாடு வரும் மே 7ம் தேதி நடைபெறும் என கார்டினல்கள் அறிவித்துள்ளன. உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் அன்றைய தினம் கத்தோலிக்க கார்டினல்கள் வாடிகன் நகருக்கு வருகை தரவுள்ளனர்.
சிஸ்டைன் தேவாலயத்தில் வெளியுலகிற்குத் தொடர்பு இல்லாத இடத்தில் இவர்கள் ஒன்றுகூடுவார்கள். அங்கு விவாதம் நடத்தி அதன் பிறகே போப்பை தேர்வு செய்வார்கள். கத்தோலிக்கக் கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த யார் வேண்டுமானாலும் போப் ஆகத் தேர்வு செய்யப்படலாம் என்ற போதிலும் பொதுவாக கார்டினல்களில் ஒருவரையே அடுத்த போப் ஆகத் தேர்வு செய்வார்கள்.
இரண்டு நாள் கழித்துத் தேர்தல்
வரும் மே 7ம் தேதி இந்த மாநாடு நடக்கும் நிலையில், இரண்டு நாட்கள் கழித்து முதல் சீக்ரெட் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 135 கார்டினல்கள் உள்ள நிலையில், அவர்கள் ஒருவரை ஒருவர் தெரிந்து கொள்ளவும் போப் யார் என்பதில் ஒருமித்த கருத்தைக் கண்டறிய உதவும் வகையில் இந்த இரண்டு நாள் டைம் எடுத்துக் கொண்டுள்ளனர். கடந்த சனிக்கிழமை போப் பிரான்சிஸின் இறுதிச் சடங்கு நடைபெற்ற நிலையில், அதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
யாருக்கு வாய்ப்பு
போப் பிரான்சிஸை பொறுத்தவரை அவர் அனைத்துத் தரப்பு மக்களுக்காகவும் குரல் கொடுத்தார். சமூக நீதி, பெண்கள் முன்னேற்றம், தன்பாலின ஈர்ப்பாளர்கள் என அனைத்துத் தரப்பு மக்களுக்காகவும் பேசினார். போப் பிரான்சிஸ் விட்டுச் சென்ற பாதையைத் தொடரும் வகையிலேயே அடுத்த போப் இருக்க வேண்டும் எனப் பெரும்பாலான கார்டினல்கள் கருதுகிறார்கள். அதேநேரம் பழமைவாதி கார்டினல்கள் அதற்குப் பதிலாக, ஒற்றுமையை உருவாக்குவதிலும் பழமைவாத கிறிஸ்துவ மதம் வலியுறுத்தப்பட்ட முக்கிய கோட்பாடுகளில் மீண்டும் கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தி வருகிறார்கள்.
இதுபோல கார்டினல்களில் இரு பிரிவாக கருத்து வேறுபாடு இருந்தால் புதிய போப்பை தேர்வு செய்யும் செயல்முறை தாமதம் ஆகும். பல நாட்கள் வரை ஆகும். ஆனால், தங்களுக்குள் கருத்து வேறுபாடுகள் எதுவும் இல்லை என்றே கார்டினல்கள் செய்தியாளர்களிடம் கூறினர்.
வெள்ளை புகை- கருப்பு புகை
இப்போது 252 கத்தோலிக்க கார்டினல்கள் உள்ளனர். இவர்கள் அனைவருமே போப்பால் நியமனம் செய்யப்பட்டவர்கள் ஆவர். இவர்கள் சேர்ந்தே புதிய போப்பை தேர்வு செய்வார்கள். மொத்தமுள்ள 252 பேரில் 80 வயதிற்குக் குறைவாக உள்ள 138 கார்டினல்கள் புதிய போப்பை தேர்வு செய்ய வாக்களிக்கத் தகுதியுடையவர்களாக உள்ளனர். மொத்தம் பதிவாகும் வாக்குகளில் 3ல் இரு பங்கு பெறுவோரே வெல்பவராகக் கருதப்படும்.
புதிய போப் தேர்வு செய்யப்பட்டால் சிஸ்டைன் தேவாலயத்தில் இருந்து வெள்ளை புகை வரும். போதிய வாக்கு பெறவில்லை என்றால் கருப்பு புகை வரும். அதன் பிறகு மீண்டும் விவாதம் நடந்து மீண்டும் தேர்தல் நடக்கும். இதுபோல 3ல் 2 பங்கு வாக்கு ஒருவருக்குக் கிடைக்கும் வரை செயல்முறை தொடரும்
எத்தனை பேர்
மேலும், கார்டினல்களில் எத்தனை பேர் மாநாட்டில் பங்கேற்பார்கள் என்பதும் தெளிவாகத் தெரியவில்லை. ஏனென்றால் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த ஒரு கார்டினல் ஏற்கனவே உடல்நலக் காரணங்களுக்காக இந்த மாநாட்டில் பங்கேற்கப் போவதில்லை என அறிவித்துவிட்டார். இதனால் மாநாடு தொடங்கும் போதுதான் எத்தனை பேர் பங்கேற்றுள்ளனர் என்பது துல்லியமாகத் தெரிய வரும்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications