ஈராக்கில் ஐஎஸ்ஐஎஸ் நிலைகளை தாக்கிய வீடியோவை வெளியிட்ட யு.எஸ். ராணுவம்
வாஷிங்டன்: ஈராக்கில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் இடங்களை அமெரிக்க ராணுவம் தாக்கியபோது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகியுள்ளது.
ஈராக், சிரியாவில் அட்டூழியம் செய்து வருகிறார்கள் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள். அவர்கள் அமெரிக்கா, ஜோர்டான், எகிப்து நாட்டவர்களை பிணையக் கைதிகளாக பிடித்து கொலை செய்துள்ளனர். இதனால் அந்நாட்டு அரசுகள் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக போர் தொடங்கியுள்ளன.

ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளை அழிக்காமல் ஓய மாட்டோம் என்று ஜோர்டான் அரசு தெரிவித்துள்ளது. எகிப்தியர்கள் 21 பேர் தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டதையடுத்து அந்நாட்டு அரசு ஈராக்கில் உள்ள தீவிரவாதிகளின் ஆயுத கிடங்கு, பயிற்சி முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது.
இந்நிலையில் அமெரிக்க படைகளும் தீவிரவாதிகளின் நிலைகள் மீது அவ்வப்போது வான்வெளி தாக்குதல் நடத்தி வருகிறது. ஈராக்கில் தீவிரவாதிகளின் இடங்களில் வான்வெளித் தாக்குதல் நடத்தியபோது எடுத்த வீடியோவை அமெரிக்க ராணுவத்தின் மத்திய கமாண்ட் வெளியிட்டுள்ளது.
ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் நிலைகள் மீது பல்வேறு நாடுகள் தாக்குதல் நடத்தி வருகின்றபோதிலும் அவர்கள் அடங்கியபாடு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications