இங்கிலாந்து குட்டி இளவரசியின் பெயர் ‘சார்லட் எலிசபெத் டயானா’!

Subscribe to Oneindia Tamil

லண்டன்: இங்கிலாந்து இளவரசர் வில்லியம் - கேத் மிடில்டன் தம்பதிக்கு பிறந்த பெண் குழந்தைக்கு ‘சார்லட் எலிசபெத் டயானா' எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. அவர் இளவரசி சார்லோட் என அழைக்கப்படுவார் என அறிவிக்கப் பட்டுள்ளது.

இங்கிலாந்து இளவரசர் சார்லஸ்-டயானா தம்பதியரின் மூத்த மகன் இளவரசர் வில்லியம் (32). இவர் ஸ்காட்லாந்து செயின்ட் ஆண்ட்ரூஸ் பல்கலைக்கழகத்தில் படித்தபோது, கேத் மிடில்டனை (33) சந்தித்தார். இருவரும் காதலித்து, 2011-ம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 29-ந் தேதி திருமணம் செய்து கொண்டனர்.

Charlotte Elizabeth Diana is Royal Baby's Name

இந்த தம்பதியருக்கு கடந்த 2013-ம் ஆண்டு ஜூலை மாதம் 22-ந் தேதி ஆண் குழந்தை பிறந்தது. அந்த ஆண் குழந்தைக்கு இளவரசர் ஜார்ஜ் எனப் பெயரிடப்பட்டது. இந்நிலையில் மீண்டும் கர்ப்பமான கேத் மிடில்டனுக்கு கடந்த 2ம் தேதி அழகிய பெண் குழந்தை ஒன்று பிறந்தது.

இதே மருத்துவமனையில்தான் 32 ஆண்டுகளுக்கு முன்பு டயானாவின் பிரசவம் நடந்தது. வில்லியம் இங்கு தான் பிறந்தார்.

தற்போது பிறந்துள்ள இந்தப் பெண் குழந்தை இளவரசர் சார்லஸ், இளவரசர் வில்லியம், இளவரசர் ஜார்ஜ் ஆகியோரை தொடர்ந்து 4-வது வாரிசாக திகழும்.

பிரசவம் முடிந்து சில மணி நேரத்திற்குள் குட்டி இளவரசியுடன் கென்சிங்டன் அரண்மனைக்கு வந்த இளவரசர் வில்லியம் தம்பதிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. டயானாவின் கணவரும் இங்கிலாந்து இளவரசருமான சார்லஸ் தனது பேத்தியை பார்த்து ஆரத்தழுவி வரவேற்றார்.

இந்நிலையில், இங்கிலாந்தின் குட்டி இளவரசிக்கு சார்லட் எலிசபத் டயானா என பெயர் சூட்டப்பட்டுள்ளதாகவும், கேம்ப்ரிட்ஜின் மதிப்புக்குரிய இளவரசி சார்லட் என்று அவர் அழைக்கப்படுவார் எனவும் கென்சிங்டன் அரண்மனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தாத்தா சார்லஸை குறிக்க, அதன் பெண் பெயரான சார்லட்டும், கொள்ளுப் பாட்டியான எலிசபெத் பெயரும், பாட்டியின் நினைவாக டயானா பெயரையும் இணைத்து, இந்தப் பெயர் உருவாக்கப் பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+