என் புருஷன் இந்த பூமியிலேயே இருக்கக் கூடாது.. போட்டுத் தள்ளிரு.. 'பலே' கள்ளக்காதல் மனைவி!
மேற்கு மிட்லான்ட்: இங்கிலாந்தின் மேற்கு மிட்லாண்ட்டைச் சேர்ந்த 40 வயதுப் பெண் தனது கள்ளக்காதலுக்கு பெரும் இடையூறாக இருந்த தனது கணவரை இந்த பூமியிலேயே அவர் இருக்கக் கூடாது. அப்படி ஒரு மரணத்தை அவருக்குக் கொடு என்று கூறி தனது 'நண்பரை' ஏவியதாக கைது செய்யப்பட்டுள்ளார்.
அந்தப் பெண்ணின் பெயர் கெல்லி கிளிப். 40 வயதாகும் இவரை போலீஸார் கைது செய்து கோர்ட்டில் நிறுத்தியுள்ளனர். ஆனால் தான் அப்படியெல்லாம் சொல்லவில்லை, செய்யவில்லை என்று மறுத்துள்ளார் கெல்லி.

பல ஆண்களுடன் கெல்லிக்குத் தொடர்பு உள்ளதாம். இவர்களுடன் சகஜமாக பழக முடியாத அளவுக்கு கணவர் கார்ல் கல்லேகர் பெரும் இடையூறாக இருந்துள்ளார். இதனால் கடுப்பாகிப் போன கெல்லி, தனது நண்பர் ஒருவரிடம், 22 வருடமாக இவரது குடைச்சல் தாங்க முடியவில்லை. இவர் பூமியில் எங்குமே இருக்கக் கூடாது. போட்டுத் தள்ளி விடு என்று கேட்டுக் கொண்டாராம்.
2 வருடமாகவே இந்த கொலைக்கான சதியை கெல்லியும், அவரது நண்பரும் செய்து வந்துள்ளனர். கெல்லிக்கு இந்த நண்பர் தவிர வேறு பல ஆண்களுடன் தொடர்பு இருக்கிறதாம். இத்தனைக்கும் கெல்லி 2 குழந்தைகளுக்குத் தாயானவர்.
ஆனால் அப்படியும் அவரது கள்ளக்காதல் மோகம் தீரவில்லை. தனது நெருக்கமான நண்பர்களில் ஒருவரான 45 வயது டால்டன் போவனிடம், தனது கணவரை கொலை செய்யுமாறு அவர் கேட்டுக் கொண்டாராம்.
ஆனால் போவனுக்கு கடைசி நேரத்தில் ஞானோதயம் வந்து விட்டது. இதனால் அவரே கெல்லியை போட்டுக் கொடுத்து விட்டார். போலீஸில் கெல்லியின் சதியை அவர் அம்பலப்படுத்த போலீஸார் கெல்லியைக் கைது செய்தனர்.
இத்தனைக்கும் கல்லேகர் தனது மனைவியை கடைசி வரை விட்டுக்கொடுக்காமல்தான் வாழ்ந்து வந்தார். மனைவியை மன்னித்து திருந்தி வாழுமாறு பலமுறை அறிவுரையும் கூறியுள்ளார். ஆனால் அவர்தான் கேட்பதாக இல்லை. பூமியில் எங்குமே கல்லேகர் இருக்கக் கூடாது என்று கூறும் அளவுக்கு கொலை வெறியுடன் நடந்துள்ளார்.
டால்டன் கடைசி நேரத்தில் காலை வாரி விடலாம் என்ற சந்தேகத்தில் வேறு இரு நண்பர்களிடமும் கூட கொலை குறித்து பேசி வந்தாராம் கெல்லி என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
ரொம்பப் பயங்கரமா இருக்கே...!
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications