பதட்டத்தில் சோட்டா ராஜன்.. தொடர்ந்து தம்மடித்து டென்ஷனைக் குறைத்துக் கொண்டிருக்கிறாராம்!
பாலி: இந்தியாவுக்கு தான் நாடு கடத்தப்பட்டதும் தனக்கு என்ன ஆகுமோ என்ற அச்சத்தில் உள்ளாராம் சோட்டா ராஜான். இந்தியா வர தனக்கு விருப்பம் இல்லை எனவும் அவர் இந்தோனேசியா போலீஸாரிடம் கூறி வருகிறாராம்.
இந்தியாவில் பல வழக்குகளில் தொடர்புடைய பிரபல நிழல் உலக தாத சோட்டா ராஜன் இந்தோனேசியாவின் பிரபல சுற்றுலாதலமான பாலி விமான நிலையத்தில் வந்திறங்கிய போது நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார்.

இதைத் தொடர்ந்து சோட்டா ராஜனை இந்தியாவிடம் ஒப்படைக்க இந்தோனேஷியா முடிவு செய்துள்ளது. இதுகுறித்து இரு நாட்டு அதிகாரிகளும் பேசி வருகிறார்கள். இந்த வார இறுதிக்குள் மும்பை போலீசாரும், சி.பி.ஐ. அதிகாரிகளும் இந்தோனேஷியா செல்கிறார்கள். அதன் பிறகு சோட்டா ராஜன் இந்தியா அழைத்து வரப்படுவார் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், சோட்டா ராஜனிடம் டென்பசார் போலீஸ் நிலையத்தில் பாலித்தீவு போலீசார் விசாரணை நடத்தினர். இதுகுறித்து பாலி போலீஸ் கமிஷனர் நைன்கோலன் தனியார் செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், சோட்டா ராஜன் ஜிம்பாப்வே செல்ல விரும்புவதாகவும். இதற்கு முன்னதாக ஜிம்பாவே மற்றும் ஆஸ்திரேலியாவில் அவர் வசித்து வந்ததாக தெரிவித்தார். மேலும் ராஜன் தன்னை விடுதலை செய்யும்படி தங்களிடம் கேட்டதாகவும், இந்தியா செல்ல தாம் விரும்பவில்லை எனவும் தெரிவித்ததாகவும் நைன்கோலன் கூறினார்.
இதனிடையே கல்லீரல் மற்றும் சிறுநீரக பிரச்சினைகளால் அவதிப்படுவதாக சோட்டா ராஜன் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் அவர் முழு ஆரோக்கியத்துடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து அவர் பயத்துடன் இருப்பதாகவும், இடைவிடாமல் சிகரெட் புகைப்பதாகவும் அவரை பரிசோதித்த மருத்துவர் தெரிவித்தார். .
சோட்டா ராஜன் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. நேபாள நாட்டில் அவர் மீது 3 கொலை வழக்குகள் உள்ளன. பெரும்பாலான வழக்குகள் மும்பை மாநகர போலீசில்தான் பதிவாகி உள்ளது.
சோட்டா ராஜனுக்கு சுஜாதா என்ற மனைவியும் 3 மகள்களும் உள்ளனர். தற்போது 50 வயதாகும் சுஜாதா மும்பையில் சில நிறுவனங்களை நடத்தி வருகிறார். 2006-ல் அவர் பண மோசடி செய்ததாக மும்பை போலீஸில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது எனவும் கூறப்படுகிறது.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு!












Click it and Unblock the Notifications