தீவிரவாதிகளுக்காக பேனா பிடிக்கும் கையில் கத்தி.. பிணையாளிகள் கழுத்தை அறுக்கும் மாணவிகள்?
லாகோஸ்: நைஜீரியாவில் உள்ள சிபோக் நகரில் இருந்து போக்கோ ஹரம் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட பள்ளி மாணவிகள் பிணையக் கைதிகளின் கழுத்தை அறுத்து கொலை செய்வது தெரிய வந்துள்ளது.
ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் உள்ள போர்னோ மாநிலத்தில் இருக்கும் சிபோக் நகரில் இருந்து 219 பள்ளி மாணவிகளை போக்கோ ஹரம் தீவிரவாதிகள் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கடத்திச் சென்றனர். மாணவிகளுக்கு என்ன ஆனது என இத்தனை நாட்களாக தெரியாமல் இருந்தது. இந்நிலையில் தீவிரவாதிகள் மாணவிகளை மூளைச்சலவை செய்து வைத்துள்ளது தெரிய வந்துள்ளது.

பேனா பிடிக்க வேண்டிய கையில் பள்ளி மாணவிகள் துப்பாக்கிளை பிடித்துக் கொண்டு சுற்றுகிறார்கள். மேலும் அவர்கள் குர்ஆன் வசனங்களை ஒப்பிக்காதவர்களை சாட்டையால் அடிப்பதுடன், பிணையக் கைதிகளின் கழுத்தை கத்தியால் அறுத்துக் கொலை செய்து வருகிறார்கள்.
இந்த தகவலை கடத்தப்பட்ட பள்ளி மாணவிகள் தங்கியிருந்த இடத்தில் இருந்த பெண் ஒருவர் தெரிவித்துள்ளார். தீவிரவாதிகள் பள்ளி மாணவிகளும் தீவிரவாதச் செயல்களில் ஈடுபட அவர்களுக்கு பயிற்சி அளித்து வருவதாக முன்பு தகவல் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு போக்கோ ஹரம் தீவிரவாதிகள் போர்னோ மாநிலத்தில் 150 முஸ்லீம்களை கொலை செய்து 3 கிராமங்களுக்கு தீ வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications