For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஷாக் மேல் ஷாக்.. முதலில் டாக்டர்கள்.. அடுத்தடுத்து குழந்தைகள்.. தொற்றுக்கு பலி.. கதறும் இந்தோனேஷியா

இந்தோனேஷியாவில் தொற்றுக்கு குழந்தைகள் அதிக அளவில் உயிரிழந்து வருகின்றனர்

Google Oneindia Tamil News

ஜாகர்த்தா: இந்தோனேஷியாவில் கொரோனா தொற்றுக்கு குழந்தைகள் அதிக அளவு உயிரிழந்து வருகின்றனர்.. இது அந்த நாட்டு மக்களை நிலைகுலைய வைத்து வருகிறது.

உலகம் முழுவதும் தொற்று அதிகமாக இருக்கிறது.. இதற்கு இந்தோனேசியாவும் விதிவிலக்கல்ல.. தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது..

 தமிழகத்தில் 5 நாட்களுக்கு இடியும் மின்னலுமாய் கொட்டித்தீர்க்கப்போகும் கனமழை - பலத்த காற்று வீசும் தமிழகத்தில் 5 நாட்களுக்கு இடியும் மின்னலுமாய் கொட்டித்தீர்க்கப்போகும் கனமழை - பலத்த காற்று வீசும்

குறிப்பாக டெல்டா வகை வைரஸ் தொடர்ந்து பல்வேறு இடங்களுக்கும் பரவி வருகிறது. இதன் மூலம் ஆசியாவில் கொரோனாவின் மையப்பகுதியாக இந்தோனேசியா உருமாறி உள்ளது..

 சிகிச்சை

சிகிச்சை

இந்தோனேசியாவை பொறுத்தவரை கிராமப்பகுதிகளே அதிகமாக இருக்கும் பகுதியாகும்.. அதனால் போதுமான ஆஸ்பத்திரிகளோ, மருத்துவ கட்டமைப்புகளோ அவ்வளவாக இல்லை. இதில் கொடுமை என்னவென்றால், டாக்டர்களுக்கும் நர்ஸ்களுக்கும் தொற்று ஏற்பட்டுவிடுவதால், அவர்களுக்கு சிகிச்சை அளிக்க போதுமான டாக்டர்கள், நர்சுகளும் இல்லை..

 டாக்டர்கள்

டாக்டர்கள்

அதனால் அவர்களும் தொற்று பாதித்து உயிரிழந்து வருகிறார்கள்.. இதுவரை 545 டாக்டர்கள் உயிரிழந்துள்ளனர்... குறிப்பாக இந்த 2வது அலையால்தான், டாக்டர்களின் உயிரிழப்புகள் அதிகரித்துவிட்டதாக கூறப்படுகிறது.. இது அந்நாட்டு மக்களுக்கு பெருத்த கவலையை அளித்து வரும் நிலையில், மற்றொரு ஷாக் கிடைத்து வருகிறது.

கொடுமை

கொடுமை

கொரோனாவால் இங்குள்ள குழந்தைகளின் உயிரிழப்பானது, ஆபத்தான அளவுக்கு அதிகரித்துள்ளதாம்.. கடந்த சில வாரங்களில் மட்டும் தொற்றுக்கு நூற்றுக்கணக்கான குழந்தைகள் உயிரிழந்தனர்.. இவர்களில் பலர் 5 வயதுக்கும் உட்பட்டவர்கள்தான் என்பது உச்சக்கட்ட கொடுமையே... கர்ப்பிணிகளின் வயிற்றில் உள்ள சிசுக்களும் பாதித்து வரும் நிலையில், பிறந்த குழந்தைகளும் உயிரிழந்துள்ளதால் மக்கள் நிலைகுலைந்து போயுள்ளனர்.

 அதிர்ச்சி

அதிர்ச்சி

இந்த இறப்பு வீதமானது மற்ற நாடுகளைவிட அதிகம் என்கிறார்கள்.. இந்தோனேஷியா முழுவதும் டெல்டா வகை தொற்று அதிகமானதுதான், குழந்தைகளின் உயிரிழப்புக்கும் காரணம் என்கிறார்கள். கடந்த வெள்ளிக்கிழமை ஒரேநாளில் 50 ஆயிரம் பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.. இதில் 1,566 பேர் உயிரிழந்துவிட்டனர்.. இப்படி தொற்றுக்கு ஆளானதில், 12.5 சதவீதம் குழந்தைகள்தான் என்பது அடுத்த அதிர்ச்சி தகவல் ஆகும்.

English summary
Children are dying of coronavirus at an alarming rate in Indonesia
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X