அமெரிக்காவுக்கு எதிராக சீனா எடுத்த மற்றொரு அதிரடி நடவடிக்கை! இதை டிரம்ப் எப்படி யோசிக்காம விட்டார்!
வாஷிங்டன்: அமெரிக்காவுக்கும்-சீனாவுக்கும் இடையே வர்த்தக போர் தீவிரமடைந்திருக்கும் நிலையில், தற்போது சீனா பதிலடி நடவடிக்கையை தொடங்கியிருக்கிறது. அமெரிக்காவின் போயிங் நிறுவனத்தின் தயாரிப்புகளை வாங்க சீனா தடை விதித்திருக்கிறது.
விமான நிறுவனங்களில் போயிங் முதன்மையானதாகும். இதன் தயாரிப்பில் ஏராளமான விமானங்கள் இயங்கி வருகின்றன. இப்படி இருக்கையில், போயிங் நிறுவன தயாரிப்புகளுக்கு சீனா தடை விதித்திருப்பது கவனம் பெற்றிருக்கிறது.

சீனாவின் மக்கள் தொகை அதிகம். உலகின் இரண்டாவது பெரிய மக்கள் தொகையை கொண்ட நாடாக சீனா இருக்கிறது. மட்டுமல்லாது இங்கு நடுத்தர மக்களின் எண்ணிக்கையும் அதிகம். எனவே விமான பயன்பாடு அதிகமாக இருக்கிறது. பெய்ஜிங், ஷாங்காய், குவாங்சோ, ஷென்ஜேன் போன்ற நகரங்களுக்கு இடையே விமான சேவை அதிக அளவில் இருக்கிறது. கடந்த 2023ம் ஆண்டு சீன விமான பயணிகளின் எண்ணிக்கை 6-7 சதவிகிதம் வரை அதிகரித்துள்ளது.
2040ம் ஆண்டுக்குள் சீனா, உலக விமான சேவையில் 20% அளவிற்கு பங்கு வகிக்கலாம் என விமான உற்பத்தியாளர்கள் கணித்திருக்கின்றனர். அப்படியெனில் விமானங்களின் தேவையும் அதிகரிக்கும்.
ஆனால், சீனாவிலிருந்து போயிங் நிறுவனத்திற்கு வரும் ஆர்டர்கள் மிக மிக குறைவாகவே இருக்கின்றன. காரணம் வரி மேட்டர்தான். அமெரிக்கா சீனாவுக்கு 145% வரியை போட்டிருக்கிறது. சீனா பதிலுக்கு 125% வரியை போட்டிருக்கிறது. இந்த வரி காரணமாக போயிங் நிறுவனத்தின் விமானங்கள், விமான உதிரி பாகங்கள் அதிக விலை ஏற்றத்தை கண்டிருக்கின்றன. எனவே, சீனாவை சேர்ந்த விமான நிறுவனங்கள் போயிங் தயாரிப்புகளை தவிர்க்க தொடங்கியுள்ளன.
ஏற்கெனவே போயிங் நிறுவனத்தை சேர்ந்த விமானங்களை லீசுக்கு எடுத்து சில நிறுவனங்கள் இயக்கி வருகின்றன. அவர்கள் கடும் நஷ்டத்தை சந்தித்திருக்கிறார்கள். அவர்களின் இழப்பை ஈடுசெய்ய நிவாரணம் வழங்குவது பற்றி சீன அரசு யோசித்து வருகிறது. இந்நிலையில்தான் போயிங் நிறுவன தயாரிப்புகளையும், விமானங்களையும் பயன்படுத்த வேண்டாம் என்று சீனா தடை விதித்திருக்கிறது. இது அமெரிக்காவுக்கு விழுந்த பேரிடியாக பார்க்கப்படுகிறது.
கடந்த 2018ம் ஆண்டு சீனாவுக்கு போயிங் நிறுவனம் அதிக அளவில் விமானத்தை சப்ளை செய்து வந்தது. அதாவது போயிங் நிறுவனம் உற்பத்தி செய்யும் ஒவ்வொரு 4 விமானங்களில் ஒன்று சீனாவுக்கு விற்கப்பட்டது. ஆனால் இடையில் போயிங் விமானத்தின் தரம் குறித்து கேள்வி எழுந்தது. எனவே, சீன விமான நிறுவனங்கள் போயிங் விமானத்தை வாங்குவதை தவிர்த்து வந்தன. இப்படி இருக்கையில் தற்போது வர்த்தக போர் காரணமாக முற்றிலுமாக போயிங் தயாரிப்பை தவிர்க்க சீனா உத்தரவிட்டிருக்கிறது.
இந்த உத்தரவு காரணமாக அமெரிக்காவுக்கு சுமார் 10-15 பில்லியன் அமெரிக்க டாலர் வரை இழப்பு ஏற்படலாம் என சொல்லப்படுகிறது.
-
சீனாவில் இருந்தபடி ஹைதராபாத்தில் ஆபரேஷன்! 3,000 கிமீ தொலைவில் ரோபோவை கண்ட்ரோல் செய்த இந்திய டாக்டர் -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
அஷ்டமத்து சனி ஓவர்! இனிதான் விஜய் ஆட்டம் ஆரம்பம்! ஆட்சியை இழக்கவும் தயங்க மாட்டார்! ஷெல்வி கணிப்பு -
பங்குச்சந்தை வீழ்ச்சி அடையப்போகிறது! தங்கம், வெள்ளி விலை பல மடங்கு உயரும்.. பிரபல எக்ஸ்பர்ட் -
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை












Click it and Unblock the Notifications