இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே! சைலன்ட்டாக வேலையை பார்த்த சீனா.. இந்தியா உஷாராக வேண்டிய நேரம் இது!
பெய்ஜிங்: சீனா தனது ராணுவ பட்ஜெட் தொகையை தற்போது அறிவித்திருக்கிறது. கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட தொகையை விட இந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட தொகை 7.2 சதவிகிதம் அதிகமாகும்.
இதன் மூலம் உலகில் அமெரிக்காவுக்கு அடுத்து ராணுவத்திற்கு அதிக செலவு செய்யும் நாடாக சீனா மாறியிருக்கிறது. இதனால் இந்தியா தனது எல்லையை உஷார்படுத்த வேண்டிய தேவை எழுந்திருக்கிறது.

ஒவ்வொரு ஆண்டும் சீன நாடாளுமன்றத்தில் பட்ஜெட் அறிக்கை தாக்கல் செய்யப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு பிரதமர் லி கியாங் பட்ஜெட் தாக்கல் செய்தார். அதில் இந்த ஆண்டு ராணுவத்திற்கு 249 பில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் ஏறத்தாழ 2.17 லட்சம் கோடி ரூபாய்) அளவுக்கு நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. இது கடந்த சில பத்தாண்டுகளுடன் ஒப்பிடும்போது குறைவுதான். ஆனால் முந்தைய ஆண்டை விட 7.2 சதவிகிதம் அதிகம். இந்திய ராணுவத்திற்கு என 81 பில்லியன் அமெரிக்க டாலர்களைதான் (70,605.55 கோடி ரூபாய்) ஒதுக்கியுள்ளது. அந்த வகையில் சீனா ஒதுக்கியுள்ள தொகை 3 மடங்கு அதிகம். அதாவது,
சீன ராணுவ பட்ஜெட் - ரூ. 2.17 லட்சம் கோடி
இந்திய ராணுவ பட்ஜெட் - ரூ. 70 ஆயிரம் கோடி
வித்தியாசம் - இந்தியாவை விட சீனா 3 மடங்கு அதிகம் ஒதுக்கியுள்ளது
இது இந்தியாவுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. அருணாச்சலப்பிரதேசத்தில் அத்துமீறல், கால்வான் பள்ளத்தாக்கில் மோதல் போன்ற சம்பவங்கள் காரணமாக இந்தியாவுக்கும் - சீனாவுக்கும் முட்டல் மோதல்கள் தொடர்ந்து வருகின்றன. இப்படி இருக்கையில், ராணுவத்திற்கு சீனா அதிக நிதியை ஒதுக்கியிருப்பது, இந்தியாவின் புருவத்தை உயர்த்தியிருக்கிறது. இனி வரும் நாட்களில் எல்லையில் இந்திய ராணுவம் தனது பாதுகாப்பை அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
சீனா இந்த அளவுக்கு ராணுவத்திற்கு செலவு செய்ய காரணம் இருக்கிறது. தைவான்தான் அதன் முதல் காரணம். தைவான் சீனாவின் ஒரு பகுதி. அந்நாட்டின் அரசமைப்பு சட்டம் அப்படித்தான் சொல்கிறது. ஏன் அமெரிக்கா கூட கடந்த ஒரு மாதம் முன்புவரை இதனை ஏற்றுகொண்டிருந்தது. ஆனால், தைவானில் சீனாவுக்கு எதிரான சில குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. அந்த குழுக்களுக்கு அமெரிக்கா தொடர்ந்து நிதியுதவி அளிக்கிறது.
ஒரு கட்டத்தில், அமெரிக்கா தனது வெளியுறவுக்கொள்ளையை மாற்றி, தைவான் சுதந்திர போராட்டத்திற்கு ஆதரவளிக்கிறோம் என்று அறிவித்தது. இது சீனாவை சூடாக்க, தற்போது தைவானை மீட்டு எடுக்க ராணுவ பலத்தை பயன்படுத்த தொடங்கியுள்ளது. மட்டுமல்லாது தைவானுக்கும் சீனாவுக்கும் இடையே உள்ள கடல் பரப்பில் அமெரிக்க கப்பல்கள் சென்று பதற்றத்தை ஏற்படுத்தியிருந்தன.
இந்த பதற்றத்தை சமாளிக்கவும் ராணுவத்தை பலப்படுத்தி வருகிறது சீனா. தனது போர் விமானங்களை கொண்டு தைவான் தீவுக்கு அருகே உள்ள பகுதியில் குண்டுகளை வீசி ராணுவ பயிற்சியையும் மேற்கொண்டு வருகிறது. தனது அனுமதியில்லாமல் அமெரிக்க அதிகாரிகள் தைவானுக்குள் நுழைவதை விரும்பாத சீனா, அமெரிக்காவுக்கு எதிராக ஒரு போருக்கு ரெடியாகி வருகிறது.
இஸ்ரேலை கொம்பு சீவி பாலஸ்தீனத்துடன் மோதவிடுவது, உக்ரைனை உசுப்பேத்தி ரஷ்யாவுடன் சண்டை செய்ய வைப்பது என்று பிஸியாக இருந்த அமெரிக்கா, தற்போது இந்த இரண்டு போர்களும் முடிவுக்கு வர உள்ளதால் அடுத்து தைவானை கையில் எடுத்திருக்கிறது.
இந்த காரணங்களுக்காக மட்டுமே சீனா ராணுவ பலத்தை அதிகரிக்கிறது என்று சொல்லிவிட முடியாது. திடீரென இந்தியா பக்கமும் திரும்ப வாய்ப்பு இருக்கிறது. எனவே நாமும் உஷாராக இருக்க வேண்டிது முக்கியம்.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள்












Click it and Unblock the Notifications