For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கிழக்கு லடாக்கில் புதிய சாலை.. சீனா அட்டகாசம்.. உறுதிப்படுத்திய செயற்கைக்கோள் படங்கள்

Google Oneindia Tamil News

பீஜிங்: ஸ்பங்கூர் த்சோவின் வடக்கே (அல்லது பாங்கோங் த்சோவின் தெற்கே) சீனாவின் மக்கள் விடுதலை ராணுவம் புதிய சாலையை அமைத்துள்ளது. இது இந்தியாவுக்கு பெரும் கவலையளிக்கும் விஷயமாக மாறியுள்ளது.

Recommended Video

    Ladakh-ல் சாலை போடும் China | அடங்காத China-வை எச்சரிக்கும் America | Oneindia Tamil

    சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிக்கையான ஜின்ஹுவா செய்தி நிறுவனம், மக்கள் விடுதலை ராணுவ கமாண்டோக்கள் வழக்கமான பயிற்சிகள் செய்வதைக் காட்டும் வகையிலான புகைப்படங்களை வெளியிட்டது.

    China builds new road south of Pangong Tso in Ladakh

    ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு லடாக்கில், குறிப்பாக பாங்கோங் த்சோ மற்றும் ஸ்பாங்கூர் த்சோவின் தெற்கே பகுதிகளில் இந்த புகைப்படங்கள் எடுக்கப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிரது.

    இந்தியா டுடேயின் ஊடகத்தின் ஆய்வில், செயற்கைக்கோள் படங்களை வைத்து பார்த்தபோது, மாதுங் நியுங்சா மலையைச் சுற்றி, ஸ்பாங்கூர் த்சோவைத் தாண்டி ஒரு மலைப்பாதை அமைக்கத் தொடங்கியுள்ளது தெரியவந்துள்ளது.

    ஏறக்குறைய 5 மீ அகலமுள்ள சாலை, பாங்கோங் த்சோவின் கிழக்கு எல்லையில் உள்ள ருடோக் நகரிலிருந்து வரும் பிரதான சாலை எஸ் 301 (301 மாநில சாலை) உடன் இணைகிறது.

    இந்த புதிய சாலை, பாங்கோங் த்சோவின் முழு தென் கரையையும் எப்போது வேண்டுமானாலும் ஆக்கிரமிக்க சீனாவுக்கு உதவும். ஃபிங்கர் 4 க்கு கிழக்கே பாங்கோங் த்சோவின் தென் கரையில் உள்ள மலை உச்சியில் ஏற்கனவே சீனா ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

    ஆகஸ்ட்-செப்டம்பர் மாதங்களில் எடுக்கப்பட்ட இந்த செயற்கைக்கோள் படங்கள் அநேகமாக டிசம்பர் முதல் வாரத்தில் வெளியிடப்பட்டவை போல தெரிகின்றன.

    English summary
    Out of a barrage of Chinese propaganda comes evidence of a new road the People's Liberation Army (PLA) is constructing on the north of Spangur Tso (or south of Pangong Tso), which is a major concern for India.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X