வேலையை காட்டிய டிராகன்.. அமெரிக்காவிற்கு சீனா - ஈரான் கூட்டமாக வைத்த ஆப்பு.. தரமான சம்பவம்

Subscribe to Oneindia Tamil

டெஹ்ரான்: ஈரான் நாட்டிலிருந்து சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் எண்ணெயின் அளவு ஜூன் மாதத்தில் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் அறிக்கையின்படி, எண்ணெய் ஏற்றுமதிக்கான ஆர்டர்கள் குறிப்பாக சீனாவின் தன்னிச்சையான சுத்திகரிப்பு ஆலைகளிடமிருந்து அதிகளவில் வந்துள்ளன.

சீனாவுக்கு அதிகளவில் ஏற்றுமதியாகும் ஈரான் எண்ணெய்

கடல்வழி கண்காணிப்பு நிறுவனமான வோர்டெக்ஸாவின் தகவல்களின்படி, ஜூன் 1 முதல் ஜூன் 20, 2025 வரை, சீனா ஒரு நாளைக்கு சராசரியாக 1.8 மில்லியன் பேரல்களுக்கும் அதிகமான ஈரானிய கச்சா எண்ணெயை இறக்குமதி செய்துள்ளது. டேட்டா அனலிட்டிக்ஸ் நிறுவனமான கெப்லர், ஜூன் 27 நிலவரப்படி, சீனாவிற்கான ஈரானின் கச்சா எண்ணெய் ஏற்றுமதி ஒரு நாளைக்கு 1.46 மில்லியன் பேரல்களாக எட்டியுள்ளது. இது மே மாதத்தில் ஒரு நாளைக்கு சுமார் ஒரு மில்லியன் பேரல்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Israel Iran

முன்னதாக வாங்குபவர்கள் இல்லாமல் ஈரானின் எண்ணெய் கப்பல்கள் கடலில் தத்தளிப்பதாக செய்திகள் வெளியாகின. இந்த நிலையில் ஜூன் 25 அன்று, நெதர்லாந்தின் தி ஹேக் நகரில் நடந்த நேட்டோ உச்சி மாநாட்டின் நிறைவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பேசுகையில், ஈரானின் எண்ணெய் வளங்களை கைப்பற்றும் எண்ணம் அமெரிக்காவுக்கு இல்லை என்று கூறினார். ஈரானிய ஆட்சிக்கு எதிரான அழுத்தம் தொடரும் அதே வேளையில், ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியை நிறுத்துவது தனது நோக்கமல்ல என்றும் அவர் தெரிவித்தார்.

ஏற்றுமதி தாமதம் மற்றும் அரசியல் சமிக்ஞைகளின் தாக்கம்

சீனாவுக்கு ஈரான் எண்ணெய் ஏற்றுமதி ஜூன் மாதத்தில் அதிகரித்ததற்கு முக்கிய காரணம், ஈரான் - இஸ்ரேல் இடையிலான போர் ஒரு காரணம் என்றும் சொல்லப்படுகிறது. மே மாதத்தில், ஈரானின் எண்ணெய் ஏற்றுமதி ஒரு நாளைக்கு 1.83 மில்லியன் பேரல்கள் என்ற உச்ச அளவை எட்டியது. ஈரானிய எண்ணெய் சீனாவுக்கு செல்ல பல வாரங்கள் ஆகும் என்பதால், அந்த ஏற்றுமதிகள் ஜூன் மாதத்தில் வழங்கப்பட்டன. இதன் அர்த்தம் மே மாதத்திலேயே ஈரான் கச்சா எண்ணெயை ஏற்றுமதி செய்துள்ளது.

ஈரானின் எண்ணெயில் பெரும்பாலானவை வடகிழக்கு சீனாவில் உள்ள சிறிய சுத்திகரிப்பு ஆலைகளால் வாங்கப்படுகின்றன. இந்த சுத்திகரிப்பு ஆலைகள் லாபம் ஈட்டுவதற்காக மலிவான எண்ணெயை நம்பியுள்ளன. மேலும் அவை உற்பத்தி செய்யும் பொருட்களை உள்நாட்டில் உள்ளூர் நாணயத்தில் விற்பனை செய்கின்றன. இதனால் டாலரை நம்பி இருக்க வேண்டியது இல்லை.

அமெரிக்காவின் அழுத்தம் தீவிரமடைந்ததால், ஈரான் கச்சா எண்ணெய்க்கு சீனா புதிய ஆர்டர்களை வழங்குவதை நிறுத்திவிட்டது. சிறிய தனியார் சுத்திகரிப்பு ஆலைகள் கூட புதிய கொள்முதல் செய்வதை நிறுத்திவிட்டதாக கெப்லர் முன்பு தெரிவித்திருந்தது. ஆனால் இப்போது இஸ்ரேல் - ஈரான் மோதலை பயன்படுத்திக்கொண்டு.. பிரச்சனை வந்தால் வரட்டும் என்று ஈரானிடம் என்று இருந்து சீனா கச்சா எண்ணெயை வாங்கி உள்ளது.

சீனா அதிரடி

ஈரான் மீது அமெரிக்கா கடுமையான பொருளாதார தடைகளை விதித்து உள்ளது. முக்கியமாக எண்ணெய் ஏற்றுமதிக்கு கடுமையான தடைகளை விதித்து உள்ளது. இப்படிப்பட்ட நிலையில்தான் சீனா ஈரானிடம் இருந்து எண்ணெய்களை வாங்கி குவிக்க தொடங்கி உள்ளது. சீனாவின் இந்த செயல் அமெரிக்காவிற்கு மிகப்பெரிய அதிர்ச்சி அளிக்கும் விஷயமாக மாறி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+