வல்லரசாக உருவெடுக்க.. சீனா போடும் பெரிய ஸ்கெட்ச்! அருணாச்சலப் பிரதேசம் பலி ஆடு? ஷாக் தகவல்
டெல்லி: சீனா 2049ம் ஆண்டு தனது நூற்றாண்டை கொண்டாட இருக்கிறது. அதற்கு முன்னர், அருணாச்சாலப் பிரதேசம், தைவான் மற்றும் தென் சீனக்கடல் பகுதியை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர சீனா திட்டமிட்டிருப்பதாக அமெரிக்கா எச்சரித்துள்ளது.
ஜப்பான், ஈராக், வியட்நாம், பிலிப்பைன் உள்ளிட்ட நாடுகளில் மனிதாபிமானமே இல்லாமல் அமெரிக்கா நடத்திய போர் மொத்த உலகத்துக்கும் தெரியும். அப்படிப்பட்ட நாடு, சீனா மீது குற்றச்சாட்டை வைத்து அறிக்கையை வெளியிட்டிருப்பது சற்றே ஆச்சரியமானதாக இருக்கிறது.

தைவான் பிரச்சனை
இந்த அறிக்கையில், "2049ல் சீனா தனது நூற்றாண்டை கொண்டாட இருக்கிறது. அதாவது கடந்த 1949ம் ஆண்டு நவம்பர் 1ம் தேதி சீன மக்கள் குடியரசு உருவானது. எனவே, 2049ல் சீனா நூற்றாண்டை கொண்டாடுகிறது. இந்த கொண்டாட்டத்திற்கு முன்னதாக தன்னை ஒரு வல்லரசாக நிலை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று சீனா திட்டமிட்டிருக்கிறது. வல்லரசாக வேண்டும் எனில் சில முக்கியமான நிலப்பரப்பை கைப்பற்ற வேண்டும். முக்கியமாக தைவானை கைப்பற்ற வேண்டும்" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
தோற்றவர்களின் பகுதி
தைவான் சீனாவுக்கு மிக முக்கியமான பகுதி. ஒரு காலத்தில் சீனாவுடன் தைவான் ஒன்றாகத்தான் இருந்தது. அப்போது இருந்த அரசை கம்யூனிஸ்ட் கிளர்ச்சியாளரக்ள் வீழ்த்தினார்கள். தோற்றவர்கள் தைவான் தீவில் குடியேறி தங்களுக்கு என ஒரு அரசை அமைத்துக்கொண்டனர். ஆனால், தைவான் சீனாவின் ஒரு பகுதி என்பதால் மீண்டும் அதை சீனாவுடன் இணைக்க, நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதை அமெரிக்கா எதிர்க்கிறது. ஏனெனில் தைவானில் ஆட்சியில் உள்ளவர்கள் சீனாவுக்கு எதிரானவர்கள். அதேபோல, அமெரிக்காவுக்கும் சீனாவுக்கு எதிரான நாடு.
சீனாவின் சேட்டை
சீனாவின் ப்ளான் 2049ல், அருணாச்சலப் பிரதேசமும் இருக்கிறது என்று அமெரிக்கா கூறுகிறது. இப்படி சொல்வதை ஓரளவுக்கு நம்ப நம்மிடம் ஆதாரங்கள் இருக்கின்றன. சமீப காலங்களாக அருணாச்சலப் பிரதேசத்தின் மீதான சீனாவின் தலையீடுகள் அதிகரித்து வருகின்றன. அருணாச்சலப் பிரதேசத்தின் சில பகுதிகளுக்கு சீனா பெயர் வைப்பதும், அருணாச்சலப் பிரசதேசத்தை சேர்ந்தவர்களை விமான நிலையங்களில் தடுத்து வைப்பதும், என பல சேட்டைகளை சீனா செய்து வருகிறது.
பாகிஸ்தானை பயன்படுத்தும் சீனா
இந்த பிரச்சனையை திசை திருப்ப சீனா, பாகிஸ்தானை மறைமுகமாஸ்ரீக பயன்படுத்துகிறது. அதாவது, பாகிஸ்தானுக்கு ஆயுதங்களையும், நவீன விமானங்களையும் வழங்குவது, இந்தியாவுக்கு எதிராக அந்நாட்டை தூண்டிவிடுவது என சீனா செயல்பட்டு வருகிறது. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது பாகிஸ்தான் பயன்படுத்திய பெரும்பாலான ஆயுதங்கள் சீனா கொடுத்ததுதான். எனவே அருண்ணாச்சலம் விஷயத்தில் உஷாராக இருக்க வேண்டும் என அமெரிக்க வெளியிட்டிருக்கும் அறிக்கையில் எச்சரிக்கப்பட்டிருக்கிறது.
புலம்பும் அமெரிக்கா
அமெரிக்கா வெளியிட்டிருக்கும் அறிக்கையில் இந்த விஷயங்கள் கவனிக்கப்பட வேண்டியவை. மற்றபடி, வேறு சில விஷயங்களையும் அமெரிக்கா சொல்லியிருக்கிறது. இந்த விஷயங்கள் எல்லாம் அமெரிக்காவின் வழக்கமான புலம்பல்களை போல இருக்கிறது. அதாவது, "தற்போது சீனாவிடம் சுமார் 600 அணுஆயுதங்கள் உள்ள நிலையில், 2030-க்குள் 1,000-க்கும் அதிகமான அணுஆயுதங்களைக் கொண்ட இலக்கை நோக்கி முழுமையாகச் செயல்பட்டு வருகிறது. அத்துடன், தற்போதுள்ள மூன்று விமானம் தாங்கிக் கப்பல்களுடன் 2035-க்குள் மேலும் ஆறு கப்பல்களைக் கட்டவும் சீனா திட்டமிட்டுள்ளது" என அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
விமர்சனம்
அப்படியெனில் முதலில் உஷாராக வேண்டியது அமெரிக்காதான். ஏனெினல், இந்தியா இப்போதைக்கு எந்த நாட்டுடனும் போர் புரியும் யோசனையில் இல்லை. உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பது, பொருளாதாரத்தை பலப்படுத்துவதில்தான் கவனம் செலுத்தி வருகிறது. எனவே, அருணாச்சலப் பிரச்சனையை மையப்படுத்தி, சீனாவுக்கு எதிராக இந்தியாவை தூண்டி விட அமெரிக்கா முயல்கிறது என்றும் சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
-
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
பெரிய சிக்கலில் இந்தியா! 1970ல் நடந்தது போல.. இப்போதும் நடக்கப்போகுது! வெளியான ஷாக் தகவல்! -
ஈரானில் விழுந்த குண்டுகளால்.. இந்தியாவில் உயர்ந்த குடிநீர் விலை.. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ! -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
வந்தாச்சு LPG ATM.. இனி காத்திருக்கவே வேண்டாம்! வெறும் 2 நிமிடத்தில் புதிய சிலிண்டர் ஈஸியா வாங்கலாம் -
மாஸ் காட்டும் இந்தியா.. கடற்படையின் பலம் டபுளாகுது! உள்ளே வந்த ஐஎன்எஸ் தாராகிரி! -
ரெடியா இருங்க மக்களே! சட்டுன்னு ஏறப்போகும் பெட்ரோல், டீசல் விலை! தேதி குறிச்சாச்சு! -
"தேங்க் யூ இந்தியா.. உங்க உதவியை நாங்கள் மறக்கவே மாட்டோம்.." போருக்கு நடுவே நன்றி சொன்ன ஈரான் -
2 மாத வாடகை தான் அட்வான்ஸ்.. ஒழுங்கா கட்டலைனா வெளியேற்றலாம்! புதிய வாடகை விதிகள் சொல்வது என்ன -
"பணத்தை கொடுத்துட்டு.. அழுது புலம்புங்க.. நான் கேட்கிறேன்.." வினோத பிஸ்னஸை ஆரம்பித்த இளைஞர் -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு












Click it and Unblock the Notifications