மங்கள்யானின் வெற்றி ஆசியாவின் பெருமை.. சீனா அதிரடி புகழாரம்!
பெய்ஜிங்: இந்தியாவின் மங்கள்யான் விண்கலத்தின் வெற்றிக்கு சீனா புகழாரம் சூட்டியுள்ளது. இது இந்தியாவின் பெருமை மட்டுமல்ல, ஆசியாவின் பெருமை என்றும் அது வர்ணித்துள்ளது.
மனித குலத்தின் மிகப் பெரிய வெற்றிகளில் ஒன்றாகவும் இது பதியப்படும் என்றும் சீனா பாராட்டு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஹுவா சுன்யிங் பெய்ஜிங்கில் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்தியாவின் செவ்வாய் கிரக ஆய்வு செயற்கைக் கோளான மங்கள்யான் செவ்வாய் கிரகத்தின் சுற்றுப் பாதையில் நுழைந்திருப்பது குறித்த செய்தி அறிந்தோம். இதற்காக இந்தியாவை வாழ்த்துகிறோம்.

இது இந்தியாவுக்குப் பெருமை தரும் நிகழ்வு. அதேபோல ஆசியாவுக்கும் இது பெருமையான ஒரு நிகழ்வாகும். மனித குலத்தின் மிகப் பெரிய வெற்றிகளில் ஒன்றாக இதை வரலாறு பதிவு செய்யும். இந்தியாவை இதற்காகவும் பாராட்டுகிறோம்.
சீனா எப்போதுமே பூமியைத் தாண்டிய அண்டவெளி ஆய்வுகளில் பிற நாடுகளுடன் ஒத்துழைத்தே செயல்பட்டு வந்துள்ளது. எதிர்காலத்திலும் இது தொடரும். உலக நாடுகளுடன் இணைந்து செயல்படுவதை எப்போதுமே சீனா விரும்பி வந்துள்ளது என்றார் அவர்.
சீனா இதற்கு முன்பு சந்திரனுக்கு விண்கலத்தை அனுப்பியுள்ளது. அதேபோல விண்வெளிக்கும் விண்வெளி வீரரைக் கூட அனுப்பியுள்ளது. ஆனால் செவ்வாய் கிரக ஆய்வுகளில்தான் அது இதுவரை வெற்றி பெற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2011ம் ஆண்டு சீனாவின் யிங்குவோ 1 என்ற செவ்வாய் கிரக ஆய்வு விண்கலத்தை சுமந்து சென்ற ரஷ்ய ராக்கெட் பாதியிலேயே எரிந்து போனது நினைவிருக்கலாம்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications