அமெரிக்கா எங்கள் முதுகில் குத்திவிட்டது.. சீனா பரபர குற்றச்சாட்டு

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெய்ஜீங்: உலக நாடுகளையே அச்சுறுத்தும் வகையில் அணு ஆயுத சோதனை நடத்தி வருவதற்கு சீனாவும் கூட்டுச் சதியில் ஈடுபட்டுள்ளது என்று வீண் பழி சுமத்துவதை முதலில் நிறுத்துங்கள் என்று சீனா கொந்தளித்துள்ளது.

வடகொரியா தொடர்ந்து அணு குண்டு சோதனை, ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. தென்கொரியா, அமெரிக்கா மற்றும் ஐ.நா.சபை ஆகியன கடும் எச்சரிக்கை மற்றும் பொருளாதார தடை விதித்தும் கண்டு கொள்ளவில்லை.

இதனால் கொரிய தீப கற்பத்தில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே தென் கொரியாவில் அதிபர் தேர்தல் நடந்தது. புதிய அதிபராக மூன்ஜெ-இன் பதவி ஏற்றார். தகுந்த நேரம் வரும் போது வட கொரியா சென்று அதன் தலைவர் கிம் ஜாங்-யங்கை சந்திப்பேன் என்று அறிவித்தார். இதன் மூலம் இரு நாடுகளுக்கு இடையேயான பதற்றம் குறையும் என எதிர்பார்க்கப்பட்டது.

 மீண்டும் அணு ஆயுத சோதனை

மீண்டும் அணு ஆயுத சோதனை

அதை பொய்யாக்கும் விதமாக கடந்த சில நாள்களுக்கு முன்பு வட மேற்கு பியாங்யாங்கில் உள்ள குசாங் பகுதியில் மீண்டும் புதிய ஏவுகணை சோதனையை வட கொரியா நடத்தியது. சர்வதேச நாடுகளின் கண்டனங்களை காதில் போட்டுக் கொள்ளாமல் வட கொரியா நடத்தியுள்ள இந்த ஏவுகணை பரிசோதனை அமெரிக்காவை ஆத்திரத்தின் உச்சிக்கே கொண்டு சென்றுள்ளது.

 சீனாவின் சதி

சீனாவின் சதி

இந்த விவகாரத்தில் சீனாவின் ஒத்துழைப்புடன்தான் வடகொரியா இதுபோன்ற அணு ஆயுத சோதனைகளை நிகழ்த்தி வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றம்சாட்டினார். மேலும் இதை சீனா நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் எச்சரித்தார். இதனால் சீனா கடும் கொந்தளிப்பில் உள்ளது.

 வீண் பழி போடாதீர்

வீண் பழி போடாதீர்

இதுகுறித்து சீன வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் கெங் சுவாங் கூறுகையில், வடகொரியா நடத்தி வரும் அணு ஆயுத சோதனைகளுக்கு சீனாதான் காரணம் என்று சமீபமாக பலர் கூறி வருகின்றனர். பிரச்சினையை முழுமையாக அறியாததாலும், உண்மையான விஷயம் புரியாததாலும்தான் சீனா மீது பழியை போடுகின்றனர் என்று நான் கருதுகிறேன்.

 ஆக்கப்பூர்வமாக

ஆக்கப்பூர்வமாக

இந்த பிரச்சினையில் சீனா ஆக்கப்பூர்வமாக செயல்படுவதற்கான ஒருங்கிணைந்த முயற்சியை எடுத்து வந்துள்ளது. சீனாவின் முதுகில் அமெரிக்கா குத்துவது சரியல்ல என்றார். இவர் குற்றம்சாட்டியபோது அமெரிக்காவின் பெயரையோ , டிரம்பின் பெயரையே நேரடியாக குறிப்பிடவில்லை.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
China has rejected Donald Trump’s repeated calls for it to do more to rein in North Korea’s nuclear programme, saying the “China responsibility theory” must stop.
Please Wait while comments are loading...