“நாங்கள் போரை விரும்புவதில்லை..” டிரம்ப் அச்சுறுத்தலுக்கு.. நச் பதிலடி கொடுத்த சீனா!

Subscribe to Oneindia Tamil

பெய்ஜிங்: ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய்யை வாங்கி, அதன் மூலம் அந்நாட்டுக்கு நிதியுதவி செய்து உக்ரைன் போரை சீனா தீவிரப்படுத்துகிறது என்று டிரம்ப் குற்றம் சாட்டியிருந்தார். இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து விளக்கமளித்த சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ, "நாங்கள் போரை விரும்புவதில்லை" என்று கூறியிருக்கிறார்.

ஒவ்வொரு நூற்றாண்டிலும் ஏதாவது ஒரு நாடு, சர்வதேச அளவில் மிகப்பெரிய வல்லரசாக மாறும். கடந்த நூற்றாண்டில் சோவியத் யூனியன் இருந்தது. இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் அமெரிக்கா இருந்தது. ஆனால் அமெரிக்காவின் காலம் வேகமாக முடிவை நோக்கி சென்றுக்கொண்டிருக்கிறது. அமெரிக்காவை வீழ்த்தி சீனா வல்லரசாக மாற முயன்று வருகிறது. இந்த போட்டி காரணமாக அமெரிக்க அதிபர் டிரம்ப், சீனாவை கிடைக்கும் கேப்பில் பழி தீர்த்து வருகிறார்.

China Trump tariff

நேட்டோ நாடுகளை இழுக்கும் டிரம்ப்

இந்த பின்னணியில்தான், நேற்று டிரம்ப் சொன்ன விஷயம் சர்வதேச அளவில் கவனம் பெற்றிருந்தது. அதாவது ரஷ்ய எண்ணெய்யை வாங்கும் சீனாவுக்கு நாங்கள் மட்டும் வரி போட்டால் போதாது. எங்களுடன் சேர்த்து நேட்டோ நாடுகளும், ஐரோப்பிய யூனியனும் 50-100% வரை வரியை போட வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார். எள்ளு தான் எண்ணெய்க்கு காயுது, நாங்க ஏன் சேர்ந்து காயனும்? என்கிற தொனியில் நேட்டோ நாடுகளும், ஐரோப்பிய யூனியனும் இந்த விஷயத்தில் மௌனம் காத்தன.

உடைத்து பேசிய சீனா

இப்படி இருக்கையில் இந்த விவகாரம் தொடர்பாக சீனா உடைத்து பேச தொடங்கியிருக்கிறது. "சீனா எந்தப் போர்களிலும் பங்கேற்பதில்லை, போர்களைத் திட்டமிடுவதும் இல்லை. சீனா அமைதிப் பேச்சுவார்த்தைகளை ஊக்குவிக்கிறது. மோதல் பிரச்சனைகளுக்கு அரசியல் தீர்வை எட்ட பேச்சுவார்த்தைகளை ஆதரிக்கிறது. பன்முகத்தன்மையை மேம்படுத்துவதற்கும், பிரச்சனைகளை தீர்க்க பல்வேறு செயல்முறைகளை வலுப்படுத்துவதற்கும், ஐ.நா.சாசனத்தின் நோக்கங்களையும் கொள்கைகளையும் கூட்டாகப் பாதுகாப்பதற்கும் நாங்கள் அழைப்பு விடுக்கிறோம்.

சீனா-ஐரோப்பிய நாடுகள் உறவு

சீனாவும், ஐரோப்பாவும் எதிரிகளாக இல்லாமல் நண்பர்களாக இருக்க வேண்டும். மோதாமல் ஒத்துழைக்க வேண்டும். இந்த நூற்றாண்டில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. இதற்கிடையில் சரியான தேர்வுகளை மேற்கொள்வது, மக்களுக்கு நாம் நிறைவேற்ற வேண்டிய பொறுப்புகளில் ஒன்றாக இருக்கிறது" என்று ஸ்லோவேனியா நாட்டின் தலைநகர் லுப்லஜானாவில் செய்தியாளர்கள் சந்திப்பின் போது சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ கூறியிருக்கிறார்.

முன்னதாக லுப்லஜானாவில் ஸ்லோவேனியாவின் துணைப் பிரதமரும், வெளியுறவு மற்றும் ஐரோப்பிய விவகாரங்களுக்கான அமைச்சருமான தன்யா பாஜோனுடன் வாங் யீ சந்தித்து பேசியிருந்தார்.

டிரம்பின் பேச்சுக்கு அர்த்தம் என்ன?

இந்த விவகாரத்தில் டிரம்பின் கருத்தை பகுப்பாய்வு செய்ய வேண்டியிருக்கிறது. அதாவது டிரம்ப் எந்த நோக்கத்தில் இப்படியான கருத்தை, இப்போது கூறியிருக்கிறார் என்பது முக்கியம். சீனா மீது எப்போதும் கோபமாகவே இருக்கும் டிரம்ப், திடீரென நேட்டோ நாடுகளையும், ஐரோப்பிய யூனியனையும் வரி விஷயத்திற்குள் இழுத்துவிட காரணம் உள்ளது. அதாவது கடந்த செப்.3ம் தேதி சீனாவில், இரண்டாம் உலகப்போர் வெற்றியை கொண்டாடும் விதமாக ராணுவ பேரணி நடைபெற்றது.

சீனாவில் நடந்த இந்த பேரணியில் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷ்ய அதிபர் புதின் ஆகியோர் பங்கேற்றிருந்தனர். இது அமெரிக்காவுக்கு மறைமுகமான எச்சரிக்கை. எங்களை சீண்டினால், கூட்டாக சேர்ந்து தாக்குவோம் என்பதுதான் அந்த வார்னிங். இந்த பின்னணியில்தான் டிரம்ப் நேட்டோவையும், ஐரோப்பிய யூனியனையும் சீனுக்குள் இழுத்துவிட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+