சீனாவில் நிரம்பி வழியும் மருத்துவமனை.. எச்எம்பிவி வைரஸ் பாதிப்பால் அலறும் மக்கள்.. இது கொரோனா 2.0?
பெய்ஜிங்: சீனாவில் தற்போது எச்எம்பிவி எனும் வைரஸ் பாதிப்பு அதிகரிக்க தொடங்கி உள்ளது. சீனாவின் பல மாகாணங்களில் மக்கள் இந்த வைரஸால் பாதிக்கப்படும் சூழலில் கொரோனா போன்ற நிலை அங்கு உருவாகி உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே தான் சீனாவில் எச்எம்பிவி பாதிப்பால் மருத்துவமனைகள் நிரம்பி வழியும் வீடியோ இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.
கடந்த 2019 ல் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது. இந்த வைரஸ் முதன் முதலில் சீனாவில் தான் பாதிப்பை ஏற்படுத்தியது. சீனாவில் இருந்து தான் இந்த வைரஸ் பல உலக நாடுகளுக்கு பரவியது. இந்த வைரஸ் பாதிப்பால் பல லட்சம் மக்கள் இறந்தனர். மேலும் பல கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீட்டனர்.

தற்போது கொரோனா பரவல் என்பது உலகம் முழுவதும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. கொரேனாவை தடுக்கும் வகையில் புதிய தடுப்புசிகள் கண்டுப்பிடிக்கப்பட்டு மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. இதனால் கொரோனா பாதிப்பு தற்போது கட்டுக்குள் உள்ளது.
இதற்கிடையே தான் தற்போது சீனாவில் புதிய வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. HMPV (எச்எம்பிவி)என அழைக்கப்படும் இந்த பாதிப்பு ஆங்கிலத்தில் human metapneumovirus (ஹியூமன் மெட்டப்நியூமோ வைரஸ்) என்று அழைக்கப்படுகிறது.
இந்த எச்எம்பிவி வைரஸ் பாதிப்பு தான் தற்போது சீனாவில் அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதனால் சீனாவில் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு செல்பவர்களின் எண்ணிக்கை சீனாவில் அதிகரித்துள்ளது. இதுதுவிர இன்புளுயன்ஸ்சா ஏ, மைகோபிளாஸ்மா நிமோனியா, கொரோனா ஆகியவையும் பரவி வருவதால் பல மருத்துவமனைகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது.
இதுதொடர்பான வீடியோக்கள் தற்போது இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது. SARS-CoV-2 (Covide-19) என்ற பெயர் கொண்ட எக்ஸ் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ள பதிவில் ஏராளமான சீன மக்கள் மருத்துவமனையில் காத்திருக்கும் வீடியோ இடம்பெற்றுள்ளது. மேலும் அந்த பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:
‛‛சீனா மருத்துவமனை நிரம்பி வழிகிறது. மக்கள் இன்புளுஎன்சா ஏ மற்றும் எம்எம்பிவியால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது 3 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த 2020ம் ஆண்டில் கோவிட் பாதிப்பை போல் இருக்கிறது. சீனாவில் ஏராளமான குழந்தைகள், வயது வந்தவர்கள் காய்ச்சல், சளி உள்ளிட்ட அறிகுறியால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் உள்ளனர். இதுபற்றி அதிகாரிகள் இன்புளுஎன்சா ஏ மற்றும் எச்எம்பிவி-யால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது சீனாவில் பரவி வரும் எச்எம்பிவி எனும் ஹியூமன் மெட்டாப்நியூமோ வைரஸ் என்பது நியூமோவிரிடே வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்த நெகடிவ் சென்ஸ் ஆர்என்ஏ வைரஸாகும். கடந்த 2001ஆம் ஆண்டு நெதர்லாந்தில் இந்த வைரஸ் முதல்முறையாகக் கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பிறகு இப்போது சீனாவில் இந்த வைரஸ் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
இதற்கு கொரோனா போன்ற அறிகுறி தான் உள்ளது. இருமல், காய்ச்சல், மூக்கடைப்பு மற்றும் மூச்சுத்திணறல் உள்ளிட்டவை முக்கிய அறிகுறிகளாக உள்ளன. இது குளிர்காலங்களில் அதிகம் பரவும் தன்மை கொண்டது. அதோடு இந்த வைரஸ் பாதிப்பு கொண்டவர்களுடன் தொடர்பில் இருக்கும் போது இன்னொருவருக்கும் பாதிப்பு என்பது ஏற்படும். இருமலின்போது வெளிவரும் எச்சில் துளி, சளி உள்ளிட்டவற்றின் வழியாக இன்னொருவருக்கு இந்த பாதிப்பு ஏற்படலாம்.
குறிப்பாக குழந்தைகள் மற்றும் முதியவர்கள் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. இதுதுவிர ஆஸ்துமா, சிஓபிடி எனப்படும் நுரையீரல் பாதிப்பு அல்லது எம்பிஸிமா போன்ற நுரையீரல் பாதிப்பு உள்ளவர்களே இந்த நோயால் அதிகம் பாதிக்கப்படலாம். இந்த எச்எம்பிவி வைரஸ் பாதிப்புக்கு தற்போது வரை தடுப்பூசி என்பது இல்லை. இதனால் சீனாவில் இந்த வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் முகக்கவசம் அணிய அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications