ஈரான் போரில்.. அமெரிக்கா கவனம் செலுத்திய நேரம்.. விண்வெளியில் சீனா செய்த தரமான சம்பவம்.. அசத்தல்!
பெய்ஜிங்: இதுவரை எந்த நாடும் செய்யாத ஒரு தரமான சம்பவத்தை சீனா விண்வெளியில் செய்து முடித்திருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது, விண்வெளியில் செயற்கைக்கோளுக்கு எரிபொருள் நிரப்பும் பணியை சீனா வெற்றிகரமாக செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. இது விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது.
மத்திய கிழக்கு நாடுகளில் போர்.. தற்போது நடந்து வரும் ஈரான் இஸ்ரேல் தாக்குதலில் அமெரிக்கா கவனம் செலுத்தி வருகிறது. தொடர் போர்களால் மற்ற ஆராய்ச்சிகள், திட்டங்களில் அமெரிக்க அரசு பின்தங்கி வருகிறது. ஒரு பக்கம் அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சிகளில் பின்தங்கி தனியாரை நம்பி இருக்கும் சூழல் உருவாகி உள்ள நிலையில்.. இன்னொரு பக்கம் சீனாவின் விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு விண்வெளியில் பல சாதனைகளை படைத்து வருகிறது. அந்த வகையில்தான் சீனா தற்போது விண்வெளியில் செயற்கைக்கோளுக்கு எரிபொருள் நிரப்பி சாதனை படைத்துள்ளதாக கூறப்படுகிறது.

விண்வெளியில் செயற்கைகோள்களுக்கு எரிபொருள்
ஜூன் 13ஆம் தேதி, 'ஸ்லிங்ஷாட் ஏரோஸ்பேஸ்' (Slingshot Aerospace) மற்றும் 'காம்ஸ்பாக்' (COMSPOC) போன்ற விண்வெளி கண்காணிப்பு நிறுவனங்கள் சீனாவின் இந்த சாதனையை உறுதி செய்துள்ளன. இந்த ஆண்டு தொடக்கத்தில் ஏவப்பட்ட SJ-25 என்ற சீன செயற்கைக்கோள், மற்றொரு சீன செயற்கைக்கோளான SJ-21 உடன் மிக நெருக்கமாக வந்ததை அவை கண்டுபிடித்துள்ளன. SJ-25 செயற்கைக்கோள் எரிபொருள் நிரப்பும் பணிக்காக உருவாக்கப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
பொதுவாக செயற்கைகோள்கள் அதன் எரிபொருள் தீர்ந்த பின் பூமியின் வட்டப்பாதையில் தொடர்ந்து சுற்றும். தொடர்ந்து வட்டப்பாதையில் இப்படி சுற்ற எரிபொருள் தேவை இல்லை. ஆனால் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பின் வட்டப்பாதையில் இருந்து செயற்கைகோள்கள் வெளியேறி, ஆழ்ந்த விண்வெளிக்கு செல்லும்.
இப்படிப்பட்ட நிலையில்தான் முதல்முறையாக சீனா செயற்கைகோள் ஒன்றிற்கு எரிபொருள் நிரம்பியதாக கூறப்படுகிறது. SJ-25 என்ற சீன செயற்கைக்கோள், மற்றொரு சீன செயற்கைக்கோளான SJ-21 உடன் மிக நெருக்கமாக வந்ததை வைத்து இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.
அவை உண்மையில் ஒன்றோடொன்று இணைந்து எரிபொருள் நிரப்பினவா என்பது உறுதியாகத் தெரியவில்லை. பூமியில் உள்ள தொலைநோக்கிகள் மூலம் அந்த அளவிலான விவரங்களை உறுதிப்படுத்த முடியாது. சீன அதிகாரிகள் இதுகுறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. ஆனால், செயற்கைக்கோள் கண்காணிப்பாளர்கள், இரண்டு செயற்கைக்கோள்களும் சில மணி நேரம் ஒரே திசையில் நகர்ந்து, பின்னர் அடுத்த நாள் பிரிந்து சென்றதாகக் கூறுகின்றனர். மேலும், ஜூன் 23ஆம் தேதி மீண்டும் ஒருமுறை அவை நெருக்கமாக வர வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
இது ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது?
சீனா விண்வெளியில் செயற்கைக்கோளுக்கு வெற்றிகரமாக எரிபொருள் நிரப்பியிருந்தால், அது ஒரு பெரிய முன்னேற்றமாக இருக்கும். தற்போது, செயற்கைக்கோள்கள் ஒருமுறை பயன்படுத்தும் பேட்டரிகள் போன்றவை. எரிபொருள் தீர்ந்ததும் அவை செயலிழந்துவிடும். விண்வெளியில் எரிபொருள் நிரப்புவதன் மூலம் செயற்கைக்கோளின் ஆயுளை நீட்டிக்கலாம், விண்வெளிக் குப்பைகளை குறைக்கலாம், மேலும் மில்லியன் கணக்கான டாலர்களை சேமிக்கலாம்.
ரோபோ ஹேண்ட்ஸ், துல்லியமான சென்சார்களை பயன்படுத்தி எரிபொருளை சீனா நிரப்பி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. எரிபொருள் நிரப்ப உதவும் அதே தொழில்நுட்பத்தை எதிரி நாடுகளின் செயற்கைக்கோள்களை செயலிழக்கச் செய்யவும் அல்லது கைப்பற்றவும் பயன்படுத்த முடியும்.
2022ஆம் ஆண்டில், சீனாவின் SJ-21 செயற்கைக்கோள் ஏற்கனவே செயலிழந்த செயற்கைக்கோள் ஒன்றை சுற்றுப்பாதையில் இருந்து இழுத்துச் சென்றது பலரது கவனத்தை ஈர்த்தது. இது விண்வெளியை சுத்தம் செய்யும் சோதனை என்று கூறப்பட்டது. ஆனால், சில அமெரிக்க அதிகாரிகள் மற்ற நாடுகளின் செயற்கைக்கோள்களைப் பிடிக்கவும் நகர்த்தவும் சீனா இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தலாம் என்று கவலைப்படுகிறார்கள்.
அதனால்தான் அமெரிக்க விண்வெளிப் படை உட்பட பல நிபுணர்கள் சீனா என்ன செய்கிறது என்பதை உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர். ஜூன் 13ஆம் தேதி என்ன நடந்தது என்பதை யாராலும் உறுதிப்படுத்த முடியவில்லை என்றாலும், அவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
அமெரிக்கா இந்த விஷயத்தில் பின்தங்கியுள்ளது. விண்வெளியில் எரிபொருள் நிரப்புவது பற்றி அமெரிக்க விண்வெளிப் படை ஆய்வுகளை மேற்கொண்டாலும்.. அதில் இதுவரை பெரிய முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications