நிலவின் மறு பக்கத்திலிருந்து மண் சாம்பிள்.. சீனா போடும் பலே திட்டம்! ஆனா விதை போட்டது சந்திரயான்தான்
பெய்ஜிங்: நிலவு குறித்த ஆராய்ச்சியில் இந்தியா புதிய மைல் கல்லை எட்டியுள்ள நிலையில், சீனாவும் களத்தில் குதித்திருக்கிறது. அதாவாது நிலவின் மற்றொரு பக்கத்திலிருந்து மண் துகள்களை எடுத்துவர ராக்கெட்டை ஏவியுள்ளது.
பூமிக்கு இயற்கையாகவே அமைந்த துணை கோள்தான் நிலவு. ஆதி காலத்தில் நாட்களை அறிந்துக்கொள்ள மனிதன் நிலவை காலண்டராக பயன்படுத்தி வந்தான். மட்டுமல்லாது, பூமியில் இருக்கும் கடல் அலையை சீராக வைத்திருப்பதிலும், பூமியின் சுழற்சியை கட்டுப்படுத்துவதிலும் நிலவு முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே நிலவு குறித்த ஆய்வுகள் தொடக்கத்தில் தீவிரமடைந்திருந்தது. ஆனால் சமீபத்திய ஆண்டுகளில் இந்த ஆய்வுகளுக்கு உலக நாடுகள் முக்கியத்துவம் கொடுக்கவில்லை.

இப்படி இருக்கையில்தான், இந்தியாவின் சந்திரயான் திட்டம் உலக நாடுகளின் கவனைத்தை நிலவு பக்கம் திருப்பியது. யாருமே இதுவரை இறங்காத நிலவின் தென் துருவத்தில் விண்கலனை இறக்கி இந்தியா உலக சாதனையை படைத்தது. இதனையடுத்து நிலவு மீது ரஷ்யாவும், ஜப்பானும் அடுத்தடுத்து விண்கலன்களை அனுப்பின. ஆனால், இரண்டும் தோல்வியடைந்தது.
இருப்பினும் முயற்சியை கைவிடாமல் நிலவில் அணு உலையை அமைக்க ரஷ்யாவும், சீனாவும் முயன்று வருகின்றன. இது இரு நாடுகளின் கனவு திட்டம். மறுபுறம் சீனா மட்டும் மிகப்பெரிய திட்டத்தை கையில் எடுத்திருக்கிறது. அதாவது, நிலவின் மற்றொரு பகுதியிலிருந்த மண்ணை பூமிக்கு கொண்டுவருவதுதான் இந்த திட்டத்தின் நோக்கம்.
சர்வதேச நாடுகளின் விண்கலன்கள் அனைத்தும் நிலவின் ஒரு பக்கத்தில்தான் தரையிறங்கியுள்ளன. அதாவது நிலவு பூமியை போல தன்னை தானே சுற்றுவதில்லை. பூமியை பார்த்தவாறு லாக் ஆகியிருக்கும். பூமியிலிருந்து நிலவின் ஒரு பக்கத்தை மட்டுமே நம்மால் பார்க்க முடியும். மற்றொரு பக்கத்தை பார்க்க முடியாது. எனவே இதுவரை மனிதர்கள் நடத்திய ஆராய்ச்சிகள் அனைத்தும் இந்த ஒரு பக்கத்தில்தான் நடத்தப்பட்டிருக்கிறது.
இப்படி இருக்கையில் மற்றொரு பக்கத்தின் மீதான ஆய்வை சீனா தொடங்கியுள்ளது. இந்த திட்டத்திற்கு 'லாங் மார்ச்-5' என பெயரிடப்பட்டிருக்கிறது. இதற்கான ராக்கெட் தெற்கு ஹைனான் தீவில் உள்ள வென்சாங் விண்வெளி ஏவு மையத்தில் இருந்து ஏவப்பட்டிருக்கிறது. இதில் Chang'e-6 எனும் ஆய்வுக் கருவி இணைக்கப்பட்டிருக்கிறது. இது நிலவின் மறு பக்கத்திலிருந்து மண் மற்றும் கற்கள் துகளை எடுத்துக்கொண்டு பூமிக்கு திரும்பும்.
இந்த திட்டத்தில் பணிபுரியும் பிரெஞ்சு விஞ்ஞானி மெஸ்லின் கூறுகையில், “இவ்வளவு குறுகிய காலத்தில் சீனா எவ்வாறு இத்தகைய லட்சிய மற்றும் வெற்றிகரமான திட்டத்தை உருவாக்க முடிந்தது என்பது எங்களுக்கு ஆச்சரியமளிக்கிறது” என்று கூறியுள்ளார்.
இந்த திட்டத்தில் பிரான்ஸ், இத்தாலி, பாகிஸ்தான் மற்றும் ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சி ஆகியவற்றை சேர்ந்த விஞ்ஞானிகள் பங்கெடுத்துள்ளனர். எனவே இந்த நாடுகளை சேர்ந்த சில கருவிகளும் இந்த நிலவுக்கு செல்லும் ராக்கெட்டில் இணைக்கப்பட்டிருக்கின்றன. இந்த ஆய்வு மனித குல வரலாற்றில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். எப்படி இருப்பினும் இதற்கான விதை போட்டது சந்திரயான் தான் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications