நாம ரொம்பதான் உஷாரா இருக்கணும் போல.. குரங்குகூட ‘அந்த’ வேலைய பார்க்க ஆரம்பிச்சுடுச்சு
சீனாவில் குரங்கு ஒன்று ஆன்லைனில் ஷாப்பிங் செய்த வீடியோ வைரலாகியுள்ளது.
Recommended Video
பிஜிங்: சீனாவில் குரங்கு ஒன்று தனது முதலாளியின் போனில் ஆன்லைனில் ஷாப்பிங் செய்த வீடியோ வைரலாகியுள்ளது.
சீனாவின் சாங்சோ நகரில் யான்செங் வன உயிரியல் பூங்கா உள்ளது. அதில் எல்வி மெங்மெங் என்பவர் ஊழியராக உள்ளார். அவர் குரங்கு ஒன்றை ஆசையாக வளர்த்து வருகிறார்.

நாளின் பெரும்பாலான நேரம் அந்த குரங்குடன் தான் நேரம் செலவிட்டு வருகிறார் மெங்மெங். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு குரங்கு அருகில் இருக்கும் போது தனது செல்போனில் ஆன்லைன் ஷாப்பிங் செயலியில் மெங்மெங் பொருட்களை பார்த்துக்கொண்டிருந்தார்.
அப்போது அந்த குரங்கு கத்தியதால், அதற்கு பசியாக இருக்கும் என நினைத்து உணவு கொண்டு வருவதற்காக மெங்மெங் வெளியில் சென்றார். தனது செல்போனை அவர் குரங்கு இருந்த இடத்திலேயே வைத்துவிட்டு சென்றுவிட்டார். அவர் திரும்பி வந்து பார்த்த போது, சில பொருட்கள் ஆர்டர் செய்ததற்கான மெசேஜ்கள் போனில் இருந்தன.
இதனால் அதிர்ச்சி அடைந்த மெங்மெங், சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தார். அதில் தனது போனை எடுத்து குரங்கு நோண்டுவது பதிவாகியிருந்தது. இதையடுத்து, குரங்கு தான் ஆன்லைன் ஷாப்பிங் செய்திருக்கிறது என மெங்மெங் உணர்ந்து கொண்டார்.
இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது. அந்த புத்திசாலி குரங்கை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர். குரங்கு ஆர்டர் செய்த பொருட்கள் அனைத்து வீட்டு உபயோக பொருட்கள் என்பதால் அதை திருப்பி அனுப்பும் எண்ணம் மெங்மெங்கிற்கு இல்லை என்பது கூடுதல் தகவல்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications