அரண்டு நிற்கும் அமெரிக்கா.. சீனா கையில் எடுத்த மிகப்பெரிய ஆயுதம்! மொத்த உலகமும் காலி!
பெய்ஜிங்: சீனா ரகசியமாக அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருவதாகவும், குறிப்பாக இந்த மாதம் மட்டும் அதிக அளவில் சோதனை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அமெரிக்கா பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளது.
அமெரிக்காவுக்கு மிகப்பெரிய போட்டியாளராக சீனா உருவெடுத்திருக்கிறது. வர்த்தகம் மற்றும் பொருளாதாரத்தில் அமெரிக்காவின் ஆதிக்கத்தை சவால் விட்ட சீனா, தற்போது ராணுவ வலிமையிலும் அமெரிக்காவுக்கு போட்டியாக உருவெடுத்திருக்கிறது. குறிப்பாக புதிய தலைமுறை அணு ஆயுதங்களை சீனா உருவாக்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 2020ம் ஆண்டு முதல் 2026 வரை, இந்த 6 ஆண்டுகளில் சீனா ஒரு முறையாவது அணுகுண்டு சோதனையை நடத்தியிருக்கலாம் என்று சீன உளவு அமைப்புகள் தெரிவித்திருப்பாக டைம்ஸ் ஆப் இஸ்ரேல் செய்தி ஊடகம் கூறியிருக்கிறது. 2020ம் ஆண்டு ஜூன் மாதம் சீனா அணுகுண்டு சோதனையை நடத்தியிருக்கிறது என்றும், இந்த சோதனையை தொடர்ந்து அமெரிக்க உளவுத்துறை சேமித்த தகவல்கள் அனைத்தும், ஆய்வு செய்து பார்த்தபோது, சீனா மிகவும் மேம்பட்ட புதிய தலைமுறை அணு ஆயுதங்களை செய்து வருவது கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.
அமெரிக்க உளவுத்துறையின் அறிக்கை, சீனா மேம்பட்ட ஆயுதங்களைத் தயாரிக்க விரும்புவதைக் காட்டுகின்றன. இதில், ஒரே ஏவுகணையில் பல சிறு அணு குண்டுகளை ஏவக்கூடிய அமைப்புகள் மற்றும் சீனா இதுவரை உருவாக்காத புதிய அணு ஆயுதங்களும் அடங்கும். தைவான் மீது படையெடுப்பின்போது அமெரிக்கா பதிலடி கொடுத்தால், இந்த அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த அறிக்கை குறித்து கேள்விக்கு பதிலளித்த பென்டகன் அதிகாரி, "குறிப்பிட்ட அணு ஆயுதச் சோதனை சம்பவங்கள் தொடர்பான உளவுத்துறை மதிப்பீடுகள் குறித்து நாங்கள் கருத்து தெரிவிக்க மாட்டோம்" என்று கூறினார்.
மறுபுறம், வாஷிங்டனில் உள்ள சீன தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் லியு பெங்யு, சி.என்.என் செய்தி ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், "அமெரிக்கா சீனாவின் அணுசக்தி கொள்கையைத் திரித்து அவதூறு பரப்புகிறது. இது அணுசக்தி மேலாதிக்கத்தைத் தொடர்வதையும், தங்கள் ஆயுதத்தை குறைக்கும் பொறுப்புகளை தவிர்க்கவும் செய்யும் அரசியல் சூழ்ச்சி" என்று குற்றம் சாட்டினார். மட்டுமல்லாது 2020ம் ஆண்டு சீனா அணு குண்டு சோதனையை நடத்தியதாக சொல்லப்படும் குற்றச்சாட்டு முற்றிலும் ஆதாரமற்றது என்றும் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications