திபெத்தில் 146 பில்லியன் டாலர் கொட்டும் சீனா...நேபாளத்துக்கு ரயில் பாதை!!
பீஜிங்: சீனாவுக்கும் இந்தியாவுக்கும் எல்லையில் கடந்த மே மாதத்தில் இருந்து பதட்டம் நிலவி வரும் நிலையில் திபெத்தில் 146 பில்லியன் டாலர் அளவிற்கு உள்கட்டமைப்புப் பணிகளில் ஈடுபடுவதற்கு பீஜிங் முடிவு செய்துள்ளது. முன்பு மற்றும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டு இருக்கும் அனைத்துப் பணிகளும் விவரவில் துவங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
இந்தியாவுக்கும், சீனாவுக்கும் சமீபத்தில் எல்லையில் பதற்றம் நிலவி வரும்நிலையில், தென்மேற்கு மண்டலத்தில் உள்கட்டமைப்பை மேம்படுத்த சீனா முடிவு செய்துள்ளது. திபெத்தின் எதிர்கால ஆட்சி குறித்து கடந்த வாரம் கம்யூனிஸ்ட் தலைவர்கள் கலந்து கொண்ட கூட்டம் நடந்தது. இதில் சீன அதிபர் ஜி ஜின்பிங் கலந்து கொண்டார். அப்போது, இந்த நடவடிக்கைகளுக்காக பணியாற்றும் அதிகாரிகளை பாராட்டியுள்ளார். அதே நேரம், பிராந்தியத்தில் ஒற்றுமையை வளப்படுத்தவும், புத்துயிர் பெறவும், வலுப்படுத்தவும் அதிக முயற்சிகள் தேவை என்று குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து செய்தி வெளியிட்டு இருக்கும் சீன அரசின் ஜின்ஹுவா செய்தி ஏஜென்சி, ''பெரும்பாலான உள்கட்டமைப்பு வசதிகள் விரைவில் முடிவடையும். சிசுவான் - திபெத் ரயில் அமைக்கும் பணியும் துவங்கும். இந்த ரயில் பாதை நேபாளத்தையும், திபெத்தையும் இணைக்கும். இத்துடன் திபெத் தன்னாட்சிப் பகுதியில் புதிய துறைமுகம் இன்று அமைக்கப்படும்'' என்று தெரிவித்துள்ளது.
சிசுவான் திபெத் ரயில் பாதை செங்டுவையும் லாசாவையும் இணைக்கிறது. இதற்கு இதுவரை திபெத் அரசாங்கம் அனுமதி வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. ஆனாலும், அடுத்த வாரத்தில் இருந்து இதற்கான பணிகள் துவங்கப்படும் என்று சீனா அறிவித்துள்ளது.
இந்தியா திபெத் எல்லையில் இருக்கும் நிங்சி பகுதியை ஒட்டி இந்த ரயில் பாதை செல்லும் என்று கூறப்பட்டுள்ளது. சீனாவுக்கும், நேபாளத்துக்கும் இடையே கடந்த 2018ல் பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. அவற்றில் ஒன்றுதான், காத்மாண்டு மற்றும் திபெத்தின் இரண்டாவது பெரிய நகரமான ஷிகட்சேவுக்கும் இடையே ரயில் பாதை அமைப்பது. இந்தியாவின் நட்பு நாடாக நேபாளம் பார்க்கப்பட்டு வரும் நிலையில் அந்த நாட்டின் உள்கட்டமைப்பு மற்றும் ரயில் பாதைகளுக்கு என்று சீனா முதலீட்டை குவித்து வருகிறது.
திபெத்தில் பெரிய அளவில் ரயில் பாதை அமைப்பது சாலை அமைப்பது என்பது சீனாவின் திட்டமாக இருந்து வருகிறது. சீனாவின் முக்கிய நகரங்களுக்கும், திபெத்துக்கும் இடையே ரயில் பாதை அமைப்பதில் சீனா ஆர்வம் காட்டி வருகிறது.
திபெத்துக்குள் கடந்த 1950ஆம் ஆண்டில் சீனா தனது ராணுவத்தை அனுப்பு தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. வலதுசாரி நாடுகளின் கண்டனத்தை சீனா லட்சியம் செய்யவில்லை. திபெத்தில் இருந்து வெளியேறிய தலைவர்களின் கருத்துக்களை கேட்க விரும்பவில்லை. அதேசமயம், திபெத்தில் வளர்ச்சிகளை கொண்டு வருவதாகவும், அந்த நாட்டின் பண்பாடு மற்றும் மதத்தை மிகவும் மதிப்பாக சீனா கூறிவருகிறது.
கடந்த சில வாரங்களாக மீண்டும் திபெத் முக்கியத்துவம் பெறுகிறது. இதற்குக் காரணம், திபெத்துக்கான ராஜதந்திர அணுகுமுறையை தடுப்பதிலும், "மனித உரிமை மீறல்களில்" ஈடுபடுவதிலும் ஈடுபட்டுள்ள சில சீன அதிகாரிகளுக்கு அமெரிக்கா விசாக்களைக் கட்டுப்படுத்தும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ தெரிவித்து இருந்தார். இந்த நிலையில்தான் திபெத் நடவடிக்கைகளில் சீனா மீண்டும் ஆர்வம் காட்டி வருகிறது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications