சீனாவில் 7 மணிநேரம் மழை.. சாலைகளில் தண்ணீரே தேங்கவில்லை.. மழை நீரை எப்படி அருமையாய் சேமிக்குறாங்க
பெய்ஜிங்: சீனாவில் ஏழு மணி நேரத்திற்கு மேல் மழை பெய்தும் சாலைகளில் எங்குமே மழை நீர் தேங்கவில்லை. அங்கு மழை நீரை சாலைகளில் துளையிட்டு அழகாக சேமிக்கிறார்கள். இது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது
சீனாவில் கோடைக்காலம் தொடங்கி 3 மாதம் ஆகிவிட்டது. அங்கு பல்வேறு பகுதிகளில் தற்போது மழை பெய்து வருகிறது. இந்த சூழலில் நம்ம ஊரில் அரை மணி நேரம் மழை பெய்தாலே சாலைகளில் தண்ணீர் குளம் போல் தேங்கும்.

ஆனால் சீனாவில் 7 மணநேரம் மழை பெய்தும் சாலைகளில் தண்ணீர் தேங்கவில்லை என்கிறார் அங்கிருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர்.
இது தான் மக்களுக்கான நாடு#Velan_twitz pic.twitter.com/sUehQSepGX
— ஏழிசைவேலன் (@elisai_velan) July 3, 2019
இது தொடர்பாக அவர் தான் சீனாவில் இருந்து பேசுவதாக கூறி வெளியிட்டுள்ள வீடியோவில், சாலைகள் மிக அற்புதமாக காணப்படுகின்றன. அவர் காண்பித்த சாலை 25 வருடங்களுக்கு முன்பு போட்ட சாலை என கூறி ஆச்சர்யப்பட வைத்துள்ளார்.
அந்த சாலையில் ஒரு இடத்தில் கூட பள்ளம் இல்லை. குடிநீர் லைனுக்காக, டெலிபோன் லைனுக்காக எங்குமே தோண்டப்படவில்லை. அந்த சாலைகள் சிறப்பாக பராமரிக்கப்படுவது பார்க்கும் போதே தெரிந்தது.
அந்த சாலையில் ஆக்ரோசமாக கொட்டும் மழைத்துளிகள் அப்படியே நேராக மழை நீர் சேகரிப்புக்காக ஒவ்வொரு பத்து அடி தூரத்திலும் அமைக்கப்பட்டுள்ள சிறு சிறு குழிகளில் அழகாக போய் சேருகின்றன. சுமார் 7 மணி நேரத்திற்கு மேல் மழை பெய்யுதும் எங்குமே சாலையில் மழை தண்ணீர் தேங்கவில்லை என பெருமிதமாக தெரிவித்தார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications